For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகா சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி.. பெரும்பான்மையை நிரூபித்தார்

கர்நாடக சட்டசபைக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மதியம் நடக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று | குமாரசாமி கர்நாடக முதல்வராக நீடிப்பாரா?- வீடியோ

    பெங்களூர்: காங்கிரஸ்- மத சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் கர்நாடக முதல்வராக பதவியேற்று இருக்கும் குமாரசாமி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.

    கர்நாடகாவில் இரண்டு வாரம் முன்பு தேர்தல் முடிந்தது. இதை அதிக இடங்களில் வெற்றிபெற்ற பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனாலும் பெரும்பான்மை இல்லாத காரணத்தால், நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே எடியூரப்பா பதவி விலகினார். இதனால் தற்போது மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி முதல்வராக பதவியேற்றுள்ளார்.

    Karnataka Floor Test: Will Kumaraswamys JD(S)-Congress prove their majority today in asssembly?

    கர்நாடகவில் உள்ளார் 224 தொகுதிகளில் 222 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. அந்த சட்டசபையின் இப்போதைய பலம் 222. இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவைபட்டனர்.

    காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 116 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது. பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் இன்னும் ஹோட்டல் அறையில் இருந்து சட்டசபைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

    நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன், புதிய சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்வராக பதவியேற்று இருக்கும் குமாரசாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார்.

    அவர் பேசிய பின் பாஜகவை சேர்ந்த எடியூரப்பா பேசினார். குமாரசாமிக்கு எதிராக அவர் கோபமாக பேசினார். இதையடுத்து பாஜக கட்சி மொத்தமாக அவையைவிட்டு வெளியேறியது. இதனால் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    இதில் காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு மொத்தம் 115 பேர் ஆதரவு தெரிவித்தனர். சபாநாயகர் ஒட்டு இதில் கணக்கில் வராது. இதனால் கர்நாடக முதல்வராக பதவியேற்று இருக்கும் குமாரசாமி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.

    English summary
    H D Kumaraswamy whose Janata Dal (S) is in an alliance with the Congress will take the floor test at the Karnataka Legislative Assembly today. The new found alliance is confident of sailing through the trust vote as it enjoys the numbers in the 222 member House.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X