For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லிங்காயத்துகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து.. கர்நாடகா அரசு ஆணை

லிங்காயத்துகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து அளித்து கர்நாடகா அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Google Oneindia Tamil News

பெங்களூரு: லிங்காயத்துகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து அளித்து கர்நாடகா அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

கர்நாடகத்தில் லிங்காயத் பிரிவை சேர்ந்தவர்கள் தங்களின் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்க கோரி வலியுறுத்தி வந்தனர். லிங்காயத் மக்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்க ஓய்வுபெற்ற நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

Karnataka government gives minority status to the lingayat

அந்த குழு லிங்காயத் சமூகத்தை தனிமதமாக அங்கீகரிக்கலாம் என்று பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரைகளுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

லிங்காயத்துக்களை தனி மதத்தினராக கர்நாடக மாநில அரசு ஏற்றுக் கொண்டது. கர்நாடகாவில் லிங்காயத் பிரிவு 12ம் நூற்றாண்டில், பசவப்பா என்பவரால் தோன்றுவிக்கப்பட்டது.

இவர்கள் சிவனை வழிபடுபவர்கள். கழுத்தில் லிங்கத்தை அணிந்து இருப்பவர்கள். கர்நாடகாவில் இப்பிரிவினரிடம் 19 சதவீத ஓட்டு வங்கி உள்ளது.

இந்நிலையில் லிங்காயத்துகளை தனி மதமாக கடந்த வாரம் அறிவித்த கர்நாடக அவர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து அளித்து உத்தரவிட்டுள்ளது.

English summary
Last week, the Karnataka government announced the lingayat as a separate religion. In this situation, the Karnataka government has given minority status to the lingayat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X