For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவி கிடையாது கலர்ஃபுல் கர்நாடகா.. மேட்ச் ஆரம்பிக்காமலே முடிஞ்சிட்டு.. பிரகாஷ் ராஜ் கிண்டல்

கர்நாடகாவில் காவி நிறம் இல்லை, இனிமேல் கர்நாடகா எப்போதும் போல வண்ணமயமாக இருக்கும் என்று பிரகாஷ்ராஜ் டிவிட் செய்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் காவி நிறம் இல்லை, இனிமேல் கர்நாடகா எப்போதும் போல வண்ணமயமாக இருக்கும் என்று பிரகாஷ்ராஜ் டிவிட் செய்துள்ளார்.

கர்நாடகாவில் 104 இடங்களில் பெற்று 7 எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே பதவி விலக்கிக் கொண்டது. இதனால் தற்போது மஜத தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.

KARNATAKA is will continue to be COLOURFUL, Match over before it began says, Prakashraj

இதனால் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி. அவர் புதன்கிழமை முதல்வராக பதவியேற்க உள்ளார்.

இதுகுறித்து பிரகாஷ்ராஜ் ட்வீட் செய்துள்ளார் ''கர்நாடக காவி நிறத்தில் இருக்க போவதில்லை. கர்நாடக எப்போதும் போல வண்ணமயமாக இருக்க போகிறது. மேட்ச் தொடங்கும் முன்பே முடிந்துவிட்டது. பாஜகவால் 55 மணி நேரம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. அன்பான குடிமக்களே இன்னும் மோசமான அரசியலுக்கு தயாராகுங்கள். தொடர்ந்து மக்கள் பக்கம் நிற்பேன் , தொடர்ந்து மக்களுக்காக கேள்வி கேட்பேன்'' என்றுள்ளார்.

கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்ட போது பிரகாஷ்ராஜை எல்லோரும் கிண்டல் செய்தனர், உடனடியாக மாநிலத்தை விட்டு வெளியேறும்படி அவரிடம் தவறாக வாதம் செய்தனர். அவர்களை கிண்டல் செய்து தற்போது பிரகாஷ் ராஜ் டிவிட் செய்துள்ளார்.

English summary
KARNATAKA is not going to be SAFFRON...but will continue to be COLOURFUL....Match over before it began...forget 56 couldn’t hold on for 55 hours..jokes apart...dear CITIZENS now get ready for more muddy politics..will continue to stand for the CITIZENS and CONTINUE #justasking.. tweets, Prakashraj about Karnataka political scenario.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X