For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக அமைச்சர் என்.மகேஷ் திடீர் ராஜினாமா.. குமாரசாமி அரசு அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக கல்வி அமைச்சர் என்.மகேஷ் திடீரென ராஜினாமா செய்துள்ளார். நூலிழை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி நடத்தி வரும் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே எம்எல்ஏ மகேஷ். குமாரசாமி அமைச்சரவையில் இவர் தொடக்க மற்றும் செகண்டரி கல்வித்துறை அமைச்சராக இருந்து வந்தார். இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

Karnataka Minister N Mahesh resigns

குமாரசாமி அரசு பதவியேற்ற பின்னர் இதுவரை அமைச்சரவை விரிவாக்கப்படாமல் உள்ளது. இதற்குக் காரணம், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கும், காங்கிரஸுக்கும் இடையே நீடித்து வரும் சிக்கல்தான். இந்த நிலையில்தான் மகேஷ் விலகியுள்ளார்.

[இதற்கு முன்பு எந்த தமிழக ஆளுநராவது இப்படி செய்து பார்த்துள்ளீர்களா? ]

பதவியிலிருந்து விலகினாலும் கூட முதல்வர் குமாரசாமி தலைமையிலா அரசுக்கு தான் தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கப் போவதாக மகேஷ் கூறியுள்ளார். எம்எல்ஏ பதவியை தான் ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சாம்ராஜ் நகர் கொள்ளேகல் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மகேஷ்.

கர்நாடக சட்டசபையில் கட்சிகள் நிலவரம்:

பாஜக - 104
காங்கிரஸ் - 80
மதச்சார்பற்ற ஜனதாதளம் - 37
சுயேச்சைகள் - 1
பகுஜன் சமாஜ் கட்சி - 1
கேபிஜேபி - 1

English summary
Karnataka Minister N Mahesh has resigned from the CM Kumarasamy govt. He is the lone BSP MLA from the Assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X