For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்தால் பல உயிர் பலியாகும்: மத்திய அமைச்சர் சதானந்தகவுடா

By Veera Kumar
Google Oneindia Tamil News

மைசூர்: கர்நாடகாவில் விவசாயிகள் தற்கொலை பெருகிவிட்ட இந்த நேரத்தில் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது என்பது இயலாத காரியம் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்தகவுடா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் விவசாயிகள் தற்கொலை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த இரு மாதங்களில் 490 விவசாயிகள் அம்மாநிலத்தில் தற்கொலை செய்துள்ளனர்.

Karnataka not in a position to give water to Tamilnadu: Sadananda Gowda

இந்நிலையில், மழையும் பொய்த்து, அணைக்கட்டுகளில் தண்ணீர் மளமளவென குறைந்துவிட்டது. நீர் மின்சாரத்தையே மொத்த மின்தேவையில் பாதியளவுக்கு நம்பியுள்ளது கர்நாடகா. அணையில் நீர் இல்லாமல் பெங்களூர் உட்பட மாநிலம் முழுவதும் கடும் மின்வெட்டு அமலாகியுள்ளது.

இந்நிலையில் மைசூரில் பேசிய மத்திய அமைச்சர் சதானந்தகவுடா கூறியதாவது: தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாத நிலையில் கர்நாடகா உள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் விவசாயிகள் தற்கொலை அதிகமாகிவிட்டது. இந்த நிலையில் தண்ணீரை திறந்துவிட்டால் விவசாயிகள் தற்கொலை மேலும் அதிகரிக்கும்.

சரியாக சொல்ல வேண்டுமானால், கூடுதல் தண்ணீர் திறப்பது, இங்கு கூடுதல் உயிர்களை (விவசாயிகள்) பலிவாங்கிவிடும். இவ்வாறு தெரிவித்தார்.

English summary
Union Law Minister D V Sadananda Gowda feared that release of any more Cauvery water to Tamil Nadu could result in more farmer suicides in Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X