For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொதப்பிய பவானி சிங்.. நெருக்கடியால் விலகி மீண்டும் வந்த ஆச்சாரியா..!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூரு: ஜெயலலிதா வழக்கில் தினம் ஒரு திருப்பம் நடந்து கொண்டுள்ளது. இதோ மீண்டும் கர்நாடக அரசு வக்கீலாக இன்று பொறுப்பேற்றுள்ளார் ஆச்சாரியா. பல குட்டுகளை வாங்கிய பவானிசிங்கிற்கு பிறகு அந்த பதவிக்கு ஆச்சாரியா மீண்டும், மீண்டு வந்துள்ளார்.

1991 முதல் 1996வரை தமிழக முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அப்போதைய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் 2001 பொதுத் தேர்தலில் அதிமுக வவெற்றி பெற்றது. அதில் ஜெயலலிதா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அன்பழகன் தலையீடு

அன்பழகன் தலையீடு

இதையடுத்து, திமுக பொருளாளர் க.அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து, தமிழகத்தில் வழக்கு நடந்தால் நியாயம் கிடைக்காது என்பதால் வேறு மாநிலத்துக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கர்நாடக மாற்றம்

கர்நாடக மாற்றம்

இதைத் தொடர்ந்து 2003 நவம்பர் 18ம்தேதி, பெங்களூருவுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். அங்கு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. கர்நாடக அரசு வழக்கை நடத்தியது.

ஆச்சாரியா

ஆச்சாரியா

2005ம் ஆண்டு பிப்ரவரி 19ம்தேதி, கர்நாடக தரப்பு அரசு வக்கீலாக பி.வி.ஆச்சாரியா நியமிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து வாதங்களை முன்னெடுத்து வைத்து, ஜெயலலிதா தரப்புக்கு மிகவும் நெருக்கடி கொடுத்தார்.

ராஜினாமா

ராஜினாமா

இந்நிலையில், 2012 ஆகஸ்ட் 12ம்தேதி, ஆச்சாரியா, அரசு வழக்கறிஞர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். 2013 ஜனவரி மாதத்தில், இந்த ராஜினாமாவை அப்போதைய கர்நாடக பாஜக அரசு ஏற்றுக்கொண்டது.

பவானிசிங்

பவானிசிங்

இதையடுத்துதான் 2013 பிப்ரவரி 2ம்தேதி, கர்நாடக அரசு வக்கீலாக பவானிசிங் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் தொடர்ந்து, குற்றவாளிகள் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளானார். நீதிமன்றமும் அவரை கண்டித்தது.

ரத்து செய்த காங்கிரஸ் அரசு

ரத்து செய்த காங்கிரஸ் அரசு

இதையடுத்து 2013 ஆகஸ்ட் 26ல், கர்நாடக காங்கிரஸ் அரசு ஒரு அறிவிக்கை மூலம், பவானிசிங் நியமனத்தை ரத்து செய்தது. ஆனால், அதே ஆண்டு செப்டம்பர் 30ம்தேதி, பவானிசிங் நியமனத்தை ரத்து செய்த கர்நாடக அரசு ஆணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

நீதிமன்றத்தில் குட்டு

நீதிமன்றத்தில் குட்டு

இதன்பிறகும், பவானிசிங் மற்றும் சிறப்பு நீதிமன்ற மோதல்கள் நின்றபாடில்லை. ஜெயலலிதா உள்ளிட்டோரிடம் பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி பொருட்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி கேட்டார் பவானிசிங். இதை கண்டித்த சிறப்பு நீதிமன்றம். 2014 பிப்ரவரி 28ம்தேதி, கூறுகையில், பவானிசிங் வேண்டுமென்றே வழக்கை தாமதிக்க முயலுவதாக குற்றம்சாட்டியது.

சம்பளம் பிடித்தம்

சம்பளம் பிடித்தம்

இதைவிட ஒருபடி மேலேபோய், எனக்கு உடல் நலம் சரியில்லை என்று காணம் கூறிவிட்டு கோர்ட்டுக்கு வராமல் இருந்தார் பவானிசிங். இதற்காக, பவானிசிங்கின் ஒரு நாள் சம்பளத்தையும் பிடித்தம் செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜெயலலிதா குற்றவாளி

ஜெயலலிதா குற்றவாளி

இதைத்தொடர்ந்து மார்ச் 18ம் தேதி பவானிசிங் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்து, தன்னிடம் சம்பளம் பிடித்தம் செய்தது தவறு என்று கூறினார். ஆனால், இதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஒருவழியாக வாதம் முடிந்து செப்டம்பர் 27ம்தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது.

மீண்டும் குட்டு

மீண்டும் குட்டு

இந்நிலையில்தான், உச்சநீதிமன்றம் நேற்று வெளியிட்ட உத்தரவில், பவானிசிங் உயர்நீதிமன்ற அப்பீல் வழக்கிலும் ஆஜரானது தவறு என்று கூறியது. இத்தனை குட்டுகளை வாங்கிய பவானிசிங்கிற்கு மாற்றாகத்தான், வழக்கை ஆரம்பத்தில் இருந்து கவனித்த ஆச்சாரியா தற்போது களமிறங்கியுள்ளார்.

நெருக்கடியால் விலகி மீண்டவர்

நெருக்கடியால் விலகி மீண்டவர்

ஆச்சாரியா, சதானந்தகவுடா தலைமையிலான பாஜக அரசால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டவராகும். அப்போதைய அரசு நெருக்கடி கொடுத்தும், பதவி விலக மறுத்ததால், மாநில அட்வகேட் ஜெனரல் பதவியை கொடுத்து மடக்க பார்த்தது கவுடா அரசு. ஆனால், உச்சநீதிமன்றம் ஒதுக்கி கொடுத்த சிறப்பு வழக்கறிஞர் பதவியை விட்டுவிட்டு, அட்வகேட் ஜெனரல் பதவிக்கு வரமாட்டேன் என்று கூறியவர் ஆச்சாரியா.

English summary
The state of Karnataka has officially appointed senior counsel B V Acharya as the Special Public Prosecutor in the J Jayalalithaa disproportionate assets case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X