For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக நகர உள்ளாட்சி தேர்தலில் பாஜகவிற்கு பெரிய சறுக்கல்.. உற்சாகத்தில் காங்கிரஸ்

கர்நாடகாவில் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடக நகர உள்ளாட்சி தேர்தலில் பின்தங்கிய பாஜக- வீடியோ

    பெங்களூர்: கர்நாடகாவில் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பாஜக பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இது அந்த கட்சிக்கு பெரிய அளவில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

    கர்நாடகாவில் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 31ம் தேதி நடந்தது. கர்நாடக நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது.

    105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. மைசூரு, துமகூரு, சிவமொக்கா ஆகிய 3 மாநகராட்சிகளுக்கும் இந்த தேர்தல் நடந்தது.

    இதுவரை

    இதுவரை

    இதுவரை வெளியாகி உள்ள முடிவுகளின் படி காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 2474 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் 2709 வார்டுகளுக்கு முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. வார்டு வாரியாக காங்கிரஸ் கட்சி 925 இடங்களிலும், பாஜக 861 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 337 இடங்களிலும் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சியே காலையில் இருந்து முன்னிலை வகித்து வருகிறது.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    பாஜக இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. சில நகர்புற பகுதிகளில் மட்டுமே பாஜக வென்றுள்ளது. அந்த பகுதிகள் பாஜக எப்போதும் வெற்றிபெறும் பகுதியாகும். ஆனாலும் அங்கும் மிகவும் குறைவான வாக்குகளில் மட்டுமே வென்றுள்ளது. இது பாஜகவிற்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கூட்டணி வைக்க முடிவு

    கூட்டணி வைக்க முடிவு

    இந்த நிலையில் கர்நாடக தேர்தலில் இதுவரை யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் இதிலும் காங்கிரஸ் கட்சியும், மஜத கட்சியும் கூட்டணி வைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மாலைக்குள் இந்த கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும். இதனால் இந்த கட்சிகளின் வலிமை இன்னும் அதிகம் ஆகும்.

    என்ன செய்ய போகிறது

    என்ன செய்ய போகிறது

    இது நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதே கூட்டணி அப்போதும் நீடிக்குமா என்று கூறவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு இந்த முடிவு புத்துணர்ச்சியை அளித்துள்ளது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றிபெறுவோம் என்று பாஜக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Karnataka Urban Local Body Poll: Congress gets new refreshment over BJP's setback.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X