For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெற்றி யாருக்கு.. பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே, நாளை நடைபெறுகிறது கர்நாடக சட்டசபை தேர்தல்!

1985ல் ஜனதாதளத்தின் ராமகிருஷ்ணஹெக்டே அரசுக்கு பிறகு, கர்நாடகாவில் தொடச்சியாக ஒரே கட்சிக்கு மக்கள் வாக்களித்து ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுத்ததில்லை. அந்த நம்பிக்கையை உடைப்பது என்பதில் உறுதியாக உள்ளார் கா

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடக தேர்தலுக்காக நேபாளம் செல்லும் மோடி.. காரணம் இருக்கும் மக்களே!- வீடியோ

    பெங்களூர்: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கர்நாடக சட்டசபை தேர்தல் நாளை நடைபெறுகிறது. இத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 கட்சிகள் நடுவே மும்முனை போட்டி நிலவுகிறது.

    இத் தேர்தலில் மொத்தம் 2,600க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள், 4.98 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாகும். இதில் ஆண் வாக்காளர்கள் சுமார் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் சுமார் 2.44 கோடியாகும். மொத்தம் 4,552 திருநங்கைகள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.

    Karnataka votes to elect new Assembly tomorrow

    தேர்தல் ஆணைய வட்டார தகவல்படி, மாநிலம் முழுக்க 55,600 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 3.5 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியாற்ற உள்ளனர். செல்போன் ஆப் மூலம் எந்த வாக்குசாவடியில் கூட்டம் அதிகம் உள்ளது என்பதை அறியவும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    1985ல் ஜனதாதளத்தின் ராமகிருஷ்ணஹெக்டே அரசுக்கு பிறகு, கர்நாடகாவில் தொடச்சியாக ஒரே கட்சிக்கு மக்கள் வாக்களித்து ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுத்ததில்லை. அந்த நம்பிக்கையை உடைப்பது என்பதில் உறுதியாக உள்ளார் காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவின் முதல்வரான சித்தராமையா.
    பெரும்பாலான கருத்து கணிப்புகள் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாகவும், பாஜக 2வது இடத்தையும் பிடிக்கும் என்றும், மஜத கிங் மேக்கராக உருவாகலாம் என்றும் கூறுகின்றன.

    224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் 223 தொகுதிகளுக்கு மட்டுமே நாளை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது பெங்களூரு ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணமடைந்துவிட்டதால் அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறாது.

    காலை 7 மணிக்கு ஆரம்பிக்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பிற மாநில எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடக சட்டசபை தேர்தல் பார்க்கப்படுவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    English summary
    After a rancorous campaign over three months, Karnataka will vote to elect a new Assembly in a three-cornered contest tomorrow. The ruling Congress and the BJP are the main contenders for power, while former prime minister H D Deve Gowda's JD(S) is likely to play the kingmaker, according to most surveys and opinion polls. There are more than 4.98 crore voters who are eligible to exercise their franchise to choose their representatives from a field of little over 2,600 candidates.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X