For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பத்மாவத் படத்துக்கு எதிராக பள்ளி குழந்தைகள் வாகனம் மீது தாக்குதல்-கார்னி சேனா குண்டர்கள் வெறிச்செயல்

பத்மாவத் படத்துக்கு எதிராக பள்ளி குழந்தைகள் வாகனம் மீது கார்னி சேனா குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    பத்மாவத் படத்துக்கு எதிராக பள்ளி குழந்தைகள் வாகனம் மீது தாக்குதல்- வீடியோ

    டெல்லி: பத்மாவத் திரைப்படத்துக்கு எதிராக பள்ளி குழந்தைகள் வாகனம் மீது கார்னி சேனா குண்டர்கள் கல்வீசித் தாக்கி வெறியாட்டம் போட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

    பத்மாவத் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் பாதுகாப்பு கிடைக்காது என்பதால் திரையரங்குகள் இப்படத்தை திரையிட மறுத்துவிட்டன.

    பள்ளி வாகனம் மீது தாக்குதல்

    பள்ளி வாகனம் மீது தாக்குதல்

    பத்மாவத் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய எந்த காட்சியும் இல்லை என தெரிவித்த பிறகும் இந்துத்துவா அமைப்பான கார்னி சேனா தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இதில் வெறித்தனமாக டெல்லி அருகே குருகிராமில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை கல்வீசித் தாக்கியுள்ளனர்.

    வைரலாகும் வீடியோ

    இத்தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த பிஞ்சு குழந்தைகள் பேருந்துகளில் சீட்டுகளுக்கு அடியே பதுங்கி அலறும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

    பள்ளிகள் மூடல்

    பள்ளிகள் மூடல்

    இச்சம்பவம் தொடர்பாக கார்னி சேனா குண்டர்கள் 29 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து குருகிராம் பகுதியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    வலுக்கும் கண்டனம்

    வலுக்கும் கண்டனம்

    கார்னிசேனா குண்டர்களின் கொடூரத் தாக்குதலை தீவிரவாத தாக்குதல் என சமூக வலைதளங்கள் விமர்சித்து வருகின்றன. நாடு முழுவதும் கார்னி சேனாவின் இந்த வெறிச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    English summary
    Karni Sena goons attack school kids, Gurugram near Delhi. Gurugram’s GD Goenka School bus was attacked by Karni Sena goons.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X