For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்பிள் லாரி.. தங்க வளையல்.. பாக் தீவிரவாதிகள் அனுப்பிய சீக்ரெட் மெசேஜ்.. கண்டுபிடித்த அஜித் தோவல்

ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்காக தீவிரவாதிகள் பயன்படுத்திய சந்தேக வார்த்தைகளை கண்டுபிடித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Amit Shah Ajit Doval meet | அமித் ஷாவுடன் அஜித் தோவலும் திடீர் ஆலோசனை

    ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்காக தீவிரவாதிகள் பயன்படுத்திய சங்கேத வார்த்தைகளை கண்டுபிடித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் கடந்த சில வாரங்கள் முன் நீக்கப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீரில் தீவிரமாக மேற்பார்வை பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    காஷ்மீரின் நிலைகுறித்து தொடர்ந்து அவர் தீவிரமாக கண்காணித்து வருகிறார். அதேபோல் 15 நாட்களுக்கு ஒருமுறை அஜித் தோவல் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு இதுகுறித்து விளக்கியும் வருகிறார்.

    அந்தஸ்து

    அந்தஸ்து

    இதையடுத்து இன்று அஜித் தோவல் தனது பேட்டியில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை பெரும்பான்மையான காஷ்மீர் மக்கள் மற்றும் லடாக் மக்கள் வரவேற்கின்றனர். அவர்கள் இதை பல காலமாக எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். எதிர்காலம், பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை அவர்கள் எதிர்பார்த்தனர்.

    மக்கள்

    மக்கள்

    அவருக்கு தற்போது இந்த வசதிகள் எல்லாம் கிடைத்துள்ளது. ஒரு சில சமூக விரோதிகளே இவற்றை எதிர்க்கின்றனர். குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 370-வது என்பது சிறப்பு அந்தஸ்து கிடையாது. அது சிறப்பு பாகுபாடு. அந்த பாகுபாட்டை நாங்கள் நீக்கி இருக்கிறோம்.

    யார்

    யார்

    தீவிரவாதிகள் மூலம் பாகிஸ்தான் பிரச்னைகளை தூண்டிவிடாமல் இருப்பதற்காகத்தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால்தான் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டே நடக்கிறது. அங்கு அரசியல் தலைவர்களும் பாதுகாப்பு கருதியே கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீர்

    காஷ்மீர், ஜம்மு, லடாக் ஆகிய மூன்று பகுதிகளிலும் தரைவழி தொலைபேசி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. காஷ்மீரில் காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க நிறுத்தப்பட்டுள்ளனர். பொது மக்களுக்கு எதிராக ராணுவம் பயன்படுத்தப்படவில்லை. பாகிஸ்தானின் செயலை பொறுத்தே காஷ்மீரில் பாதுகாப்பை குறைப்பதை குறித்து யோசிப்போம்.

    எல்லையில் என்ன

    எல்லையில் என்ன

    காஷ்மீர் எல்லைக்கு அருகில் நிறைய பாகிஸ்தான் டவர்கள் இருக்கிறது. அவர்கள் இந்தியாவில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளுக்கு இதன் மூலம் சந்தேக சிக்னல்களை அனுப்பி வருகிறார்கள். ''எத்தனை ஆப்பிள் லாரி அங்கு இருக்கிறது. உங்களால் அதை நிறுத்த முடியுமா? நாங்கள் உங்களுக்கு நகைகளை அனுப்பி வைக்கட்டுமா'' என்று சந்தேகமாக பேசிக்கொள்கிறார்கள் .

    யார்

    யார்

    இது தீவிரவாதிகள் பயன்படுத்தும் சந்தேக குறியீட்டு வார்த்தைகள். ஆயுதம் மற்றும் ஆள் பலம் கேட்டு இப்படி பேசிக்கொள்கிறார்கள். இதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இதன் மூலம் 300 தீவிரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள், என்று அஜித் தோவல் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Kashmir: "Apple Trucks", "Bangles", NSA intercepts terrorist secret code from Pakistan says Ajit Doval.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X