For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் வெடித்த ''மர்ம'' குண்டு.. 5 பொதுமக்கள் பலி.. 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் மர்ம வெடிகுண்டு ஒன்று வெடித்த காரணத்தால் 5 பொதுமக்கள் பலியாகி உள்ளனர்.

Google Oneindia Tamil News

காஷ்மீர்: காஷ்மீரில் மர்ம வெடிகுண்டு ஒன்று வெடித்த காரணத்தால் 5 பொதுமக்கள் பலியாகி உள்ளனர்.

இன்று காலையில் இருந்து மதியம் வரை காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவம் திடீரென்று தாக்குதல் நடத்தி வருகிறது.

Kashmir: Fight breaks between militants and security forces, 3 terrorists, 5 civilians died

ஷோபியன், புல்வாமா, பார்திபோரா, மற்றும் கனவ்போரா ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை குல்ஹாம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

இதற்கு பதிலடியாக ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து ராணுவத்துக்கும், தீவிரவாதிக்கும் இடையில் துப்பாக்கி சூடு 6மணி நேரம் நடந்தது.

இந்த கடும் துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் பலியாகி உள்ளார். ஆனால் துப்பாக்கி சூடு முடிந்த சில நிமிடத்தில் மக்கள் அங்கு கூடி இருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து மறைத்து வைத்திருந்த குண்டுகள் வெடித்தது.

இந்த குண்டுகள் வெடித்ததில் 5 பொதுமக்கள் பலியானார்கள். இது என்ன மாதிரியான குண்டு என்று தெரியாமல் ராணுவம் குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளது. இது மிகவும் வித்தியாசமான மர்ம குண்டு என்று கூறுகிறார்கள்.

இதில் மொத்தம் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். இனி வரும் சமயங்களில் துப்பாக்கி சூடு நடந்தால் உடனே அந்த பகுதிக்கு மக்கள் வர கூடாது என்று ராணுவம் அறிவுறுத்தி இருக்கிறது.

English summary
The encounter concluded just now and I have been told that three terrorists were neutralised in it. 5 people died due to the explosion. The operation is being wound up. Their identity is yet to be ascertained: DGP Dilbag Singh on the encounter in Kulgam's Larro area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X