For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வரிசையாக 119 என்கவுண்டர்.. பல மாஸ்டர் மைண்ட்களின் கதை முடிந்தது.. காஷ்மீரில் செம திருப்பம்.. பின்னணி

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இருக்கும் தீவிரவாத இயக்கங்களை சேர்ந்த முக்கியமான தீவிரவாதிகள் எல்லோரும் கிட்டத்தட்ட என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் நடந்த அதிரடி என்கவுண்டர் காரணமாக வரிசையாக முக்கியமான தீவிரவாதிகள் எல்லோரும் கொல்லப்பட்டு உள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு மாதமாக தினமும் போலீஸ் என்கவுண்டர் தீவிரமாக நடந்து வருகிறது. தினமும் நடக்கும் என்கவுண்டரில் 5-8 தீவிரவாதிகள் கொல்லப்படுகிறார்கள். தீவிரவாத இயக்கங்களில் தலைவர்கள் வரிசையாக என்கவுண்டர் செய்யப்படுகிறார்கள்.

காஷ்மீரில் ஐஜிபியாக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் தொடங்கி ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் வரை இந்த தொடர் என்கவுண்டர்களுக்கு பின் சிறப்பான திட்டங்களை வகுத்துள்ளனர். இதனால் காஷ்மீரில் பல தீவிரவாத இயக்கங்களுக்கு தலைவரே இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அலி பாய்க்கு வந்த பார்சல்.. காஷ்மீரில் சுற்றி திரிந்த மர்ம டிரோன்.. இந்தியா ராணுவம் சொன்ன ஷாக் தகவல்அலி பாய்க்கு வந்த பார்சல்.. காஷ்மீரில் சுற்றி திரிந்த மர்ம டிரோன்.. இந்தியா ராணுவம் சொன்ன ஷாக் தகவல்

பேட்டி அளித்தார்

பேட்டி அளித்தார்

இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் பேட்டி அளித்துள்ளார். அதில், வரிசையாக காஷ்மீரில் இருக்கும் தீவிரவாதிகள் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். முக்கியமாக ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் ரியாஸ் நைகோ இந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. புல்வாமா தாக்குதல் போலவே இன்னொரு தாக்குதலை நடத்த அவர் திட்டமிட்ட போது, ராணுவத்தால் அவர் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

சூப்பர் வருடம்

சூப்பர் வருடம்

காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் இந்த வருடம்தான் மிக சிறப்பான வருடமாக மாறி இருக்கிறது. இதை நாங்கள் ஒன்று அல்லது இரண்டு மாதத்தில் சாதிக்கவில்லை. கடந்த மூன்று வருடமாக திட்டமிட்டு, இந்த வருட தொடக்கத்தில் இருந்து செயல்படுத்தி அதில் வெற்றி பெற்று இருக்கிறோம். மிக சரியான திட்டமிடல் மற்றும் உளவு தகவல்கள்தான் இதற்கு காரணம்.

எத்தனை பேர்

எத்தனை பேர்

இந்த ஒரு வருடத்தில் மட்டும் இதுவரை 119 தீவிரவாதிகளை என்கவுண்டர் செய்து இருக்கிறோம். ரியாஸ் நைகோ, அப்துல் ரெஹ்மான், சுபைர், குவாரி யாசிர், ஜுனைத் ஷெரி, புர்ஹான் கொக்கா, ஹைதர், தாயப் வாலித் என்று காஷ்மீரில் தீவிரவாத மாஸ்டர் மைண்டாக சுற்றிக்கொண்டு இருந்த எல்லோரையும் என்கவுண்டர் செய்து இருக்கிறோம். இவர்கள்தான் அங்கு தீவிரவாதத்திற்கு முதுகெலும்பாக இருந்தனர். அவர்களையே வீழ்த்தி இருக்கிறோம்.

எத்தனை கொலை

எத்தனை கொலை

இந்த வருடம்தான் காஷ்மீரில் மிக குறைவான எண்ணிக்கையில் பாதுகாவலர்கள், பாதுகாப்பு படையினர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். 2018 மற்றும் 2017 வருடங்களில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டால் ஒரு பாதுகாவலர் இந்திய தரப்பில் கொல்லப்படுவார். தற்போது 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டால் 1 பாதுகாவலர் பலி என்ற நிலைக்கு இந்தியா முன்னேறி இருக்கிறது.

சங்கிலி இல்லை

சங்கிலி இல்லை

காஷ்மீரில் முக்கியமான தீவிரவாத குழுக்களின் தீவிரவாதிகள் எல்லோரும் என்கவுண்டர் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தீவிரவாதிகள் இடையே இருக்கும் சங்கிலி தொடரை மொத்தமாக உடைத்து இருக்கிறோம். அனைத்தையும் சின்ன தகவல் கூட கசியாமல் சத்தமின்றி முடித்து உள்ளோம். முன்பெல்லாம் துப்பாக்கி சூடு நடந்தால் அங்கே பதற்றம் நிலவும். இப்போது எல்லாம் அப்படி நிகழாமல் பார்த்துக் கொள்கிறோம்.

போலீசின் உளவுத்துறை தகவல்

போலீசின் உளவுத்துறை தகவல்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இதில் சில ஆபரேஷன் ராணுவம் காஷ்மீர் போலீஸ் இணைந்து நடத்தும் ஆபரேஷன் ஆகும். முழுக்க முழுக்க காஷ்மீர் போலீசின் உளவுத்துறையின் தகவல்கள்தான் இதற்கு காரணம். தீவிரவாதிகள் எங்கே இருக்கிறார்கள் என்று மிக துல்லியமாக தெரிவிப்பதால் எங்களுக்கு தாக்குதல் நடத்த வசதியாக உள்ளது, என்று தில்பாங் சிங் தெரிவித்துள்ளார்.

டாப் லெவல் தீவிரவாதி

டாப் லெவல் தீவிரவாதி

மேலும், முக்கியமாக இப்போது நாங்கள் டாப் லெவல் தீவிரவாதிகளை எளிதாக என்கவுண்டர் செய்கிறோம். கமெண்டர்கள் எனப்படும் தீவிரவாத குழு தலைவர்களை எளிதாக எங்களால் என்கவுண்டர் செய்ய முடிகிறது. டெக்கினிக்கல் ரீதியான உளவு தகவல்களும் இதற்கு மிக முக்கிய காரணம் ஆகும். இப்போது நீங்கள் காஷ்மீரில் எந்த தீவிரவாத குழுவை எடுத்தாலும் அதற்கு தலைவர் இல்லாத நிலையை உருவாக்கி உள்ளது.

தலைவர் இல்லை

தலைவர் இல்லை

ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தோய்ப்பா, அன்சார் என்று எந்த குழுவை எடுத்தாலும் அனைத்திற்கும் தற்போது தலைவர் இல்லை. முதல் நிலை தலைவர் தொடங்கி இரண்டாம் நிலை தலைவர் வரை எல்லோரையும் என்கவுண்டர் செய்து விட்டோம். தீவிரவாதிகள் என்ன செய்வது, எப்படி இதற்கு எதிர்வினையாற்றுவது என்று தெரியாமல் குழம்பி போய் இருக்கிறார்கள்.

மொத்தமும் போலீஸ் ஆபரேஷன்

மொத்தமும் போலீஸ் ஆபரேஷன்

இதன் மூலம் தொடர்ச்சியாக தீவிரவாத தாக்குதல்களை தடுத்து வருகிறோம். இதெல்லாம் முழுக்க முழுக்க 100% போலீஸ் ஆபரேஷன். எங்களுக்கு அங்கிருக்கும் மக்களும் பெரிய அளவில் உதவிகளை செய்கிறார்கள், எங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். கள உளவுத் தகவல் தொடங்கி, சோஷியல் மீடியா உளவு வரை பல விஷயங்கள் மூலம் காஷ்மீரில் தீவிரமாக உளவு பணிகளை செய்து தீவிரவாதிகளை கண்டுபிடிக்கிறோம்.

இன்பார்மர்கள் உதவி

இன்பார்மர்கள் உதவி

இதற்காக நாங்கள் பல இடங்களில் ரகசிய இன்பார்மர்களை வைத்து இருக்கிறோம். இவர்கள் எங்கே இருப்பார்கள் என்று எங்களுக்கு கூட தெரியாது. தகவல் மட்டுமே எங்களுக்கு வரும். அந்த அளவிற்கு உளவு பணிகளை செய்கிறோம். இதனால்தான் 1 வருடத்தில் வரிசையாக இத்தனை தீவிரவாதிகளை என்கவுண்டர் செய்ய முடிந்தது. இந்த வருட இறுதிக்குள் பல தீவிரவாத அமைப்புகளை மொத்தமாக செயல் இழக்க செய்ய போகிறோம், என்று தில்பாங் சிங் தெரிவித்துள்ளார்.

English summary
Kashmir police almost eliminated all masterminds and leaders in the encounter in past weeks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X