For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரில் கடும் குளிர்: மைனஸ் 8.7 டிகிரி-க்கு கீழ் போனது வெப்பநிலை!

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது.

இன்று காலையில் காஷ்மீரின் பெரும்பாலான பகுதியின் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் கீழே சென்றுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பாக பூஜ்ஜியத்திற்கு கீழே -3.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைந்ததே இதுவரையில் குறைந்தபட்சமாக இருந்தது. ஆனால் இன்றோ அதைவிட குறைந்து -8.7 வரை சென்று மக்களை வாட்டி வருகிறது.

 Kashmir valley records temperature in minus

இது குறித்து வானியல் ஆராய்ச்சி நிலைய அதிகாரி பேசுகையில் வருடாந்திர அமர்நாத் யாத்திரையின் முகாமாக இருக்கும் பஹல்கம் -4.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்ததாக கூறினார்.

பிரபல ஸ்கை ரெசார்ட் குறைந்தபட்சமாக -4.6 டிகிரி செல்சியஸ்-ம் பின்னர் நேற்றிரவு 0.6 டிகிரி செல்சியஸும் இருந்துள்ளது. தெற்கு காஷ்மீரின் கோகெர்னாக் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை -2.2 டிகிரி செல்சியஸ் ஆக இருந்துள்ளது.

மேலும் வடக்கு காஷ்மீரின் குப்வாரா பகுதி குறைந்தபட்சமாக -1.7 டிகிரி செல்சியஸ் இருந்துள்ளது முன்னதாக நேற்றிரவு -3.0 டிகிரி செல்சியஸ் இருந்துள்ளது.

ஒட்டுமொத்தத்தில் மிகவும் குறைந்த வெப்பநிலையை உணர்ந்தது லடாக் பகுதியின் லே-வாக உள்ளது. -8.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை அப்பகுதி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Kashmir valley has recorded subzero temperature and shivers in cold
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X