For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்கள் உடையை போட மறுத்த காஷ்மீர் மாணவர்.. ராஜஸ்தானில் கட்டி வைத்து உதைத்த மர்ம கும்பல்

Google Oneindia Tamil News

Recommended Video

    கொடூர வீடியோ.. பெண்கள் உடையை போட மறுத்த காஷ்மீர் மாணவர்.. ராஜஸ்தானில் கட்டி வைத்து உதைத்த மர்ம கும்பல்

    ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பெண்கள் உடை அணிய மறுத்த காஷ்மீர் மாணவனை மர்ம நபர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.

    காஷ்மீரை சேர்ந்தவர் மிர் ஃபியாஸ். இவர் ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் கல்லூரி மாணவர். இவர் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

    Kashmiri student forced to wear womens clothes in Alwar

    இவர் தான் தங்கியிருக்கும் மேன்சனுக்கு அருகில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்துக் கொண்டு நீம்ரானா மார்க்கெட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக அடித்தது. பின்னர் பெண்கள் அணியும் உடையை அணியுமாறு கட்டாயப்படுத்தியது. இதற்கு மிர் ஃபியாஸ் மறுப்பு தெரிவித்தார்.

    அரிவாளை எடுக்கிறார்.. சுட்டு பொசுக்குகிறார்.. தனுஷ் ரசிகர்களாம்.. 3 டிக் டாக் இளைஞர்களுக்கு வலை!அரிவாளை எடுக்கிறார்.. சுட்டு பொசுக்குகிறார்.. தனுஷ் ரசிகர்களாம்.. 3 டிக் டாக் இளைஞர்களுக்கு வலை!

    இதனால் ஆத்திரமடைந்த மேலும் 12 பேர் கொண்ட கும்பல் மிர்ரை சரமாரியாக அடித்த அந்த கும்பல் அவரை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து அடித்தது. இதில் மிர் படுகாயமடைந்தார். இதையடுத்து சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் போலீஸுக்கு தகவல் அளித்தனர்.

    போலீஸார் வருவதை பார்த்த அந்த கும்பல் தப்பியோடிவிட்டது. இதையடுத்து போலீஸார் 12 முதல் 20 பேர் வரை வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    English summary
    Kashmiri student who studies Aeronautical engineering in Rajasthan was thrashed and forced to wear women's dress.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X