For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேசத்தை உலுக்கிய கதுவா சிறுமி பலாத்கார படுகொலை வழக்கு- 3 பேருக்கு ஆயுள்- மூவருக்கு 5 ஆண்டு சிறை

Google Oneindia Tamil News

Recommended Video

    Kathua case | கதுவா பலாத்கார படுகொலை வழக்கு- 5 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு- வீடியோ

    ஸ்ரீநகர்: தேசத்தையே உலுக்கிய காஷ்மீர் சிறுமி பலாத்கார படுகொலை வழக்கில் குற்றவாளிகள் 6 பேரில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பதான்கோட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் 3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி காணாமல் போனார். ஒருவாரம் கழித்து சிதைந்த நிலையில் அவரது சடலம்தான் கிடைத்தது.

    ஆனால் சிறுமியின் மரணம் குறித்து அம்மாநில போலீசார் தொடக்கத்தில் விசாரணை நடத்தவில்லை. இதனால் கொந்தளித்து போன பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போரடினர்.

    சென்னை தாம்பரம் அருகே பள்ளி வளாகத்தில் தீ விபத்து.. மாணவர்கள் அவசரமாக வெளியேற்றம்.. பெற்றோர் பீதி!சென்னை தாம்பரம் அருகே பள்ளி வளாகத்தில் தீ விபத்து.. மாணவர்கள் அவசரமாக வெளியேற்றம்.. பெற்றோர் பீதி!

    கோவிலுக்குள் பலாத்காரம்

    கோவிலுக்குள் பலாத்காரம்

    சிறுமிக்கு நீதி கேட்டு தேசம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. பின்னர்தான் இந்துத்துவா வெறியர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அம்பலமானது. சிறுமியை கதுவா காட்டுப்பகுதியில் இருந்து கடத்திச் சென்ற கொடூரர்கள், கோவில் ஒன்றில் 4 நாட்களாக மறைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். அச்சிறுமிக்கு நினைவே திரும்பாத வகையில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளனர்.

    கல்லை போட்டு கொலை

    கல்லை போட்டு கொலை

    4 நாட்களாக உணவும் தண்ணீரும் தராமலேயே இந்த கொடூர சம்பவத்தை கோவிலுக்குள் வைத்தே நிகழ்த்தி இருக்கின்றனர். அதுவும் வெளியில் தெரியாமல் இருக்க பூஜைகளை தொடர்ந்து செய்து கொண்டே இந்த படுபாதகத்தை நடத்தியிருந்தனர். பலாத்காரம் செய்த கையோடு தலையில் கல்லை போட்டு கொலையும் செய்தனர் குற்றவாளிகள்.

    பாஜக ஆதரவு

    பாஜக ஆதரவு

    இக்கொடூர குற்றவாளிகளுக்கு பாஜக முழுமையாக ஆதரவு தெரிவித்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் காமுகர்களான முதன்மை குற்றவாளி சஞ்ஜித் ராம் மற்றும் 4 போலீசார் என மொத்தம் 7 பேரை கைது செய்தது போலீஸ்.

    பதான்கோட் நீதிமன்றம்

    பதான்கோட் நீதிமன்றம்

    சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சிறுமியை கொடூரமாக பலாத்காரம் செய்தததே அச்சமூகத்தினரை அச்சுறுத்துவதற்கு என வாக்குமூலமும் கொடுத்தனர். உச்சநீதிமன்றத்துக்கு சென்ற இவ்வழக்கு, பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

    3 பேருக்கு ஆயுள் தண்டனை

    கடந்த ஆண்டு மே மாதம் 31-ந் தேதி முதல் பதான்கோட் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கி தினமும் நடைபெற்று வந்தது. நாட்டை கொந்தளிக்க வைத்த இவ்வழக்கில் இன்று பதான்கோட் நீதிபதி தேஜ்விந்தர் சிங் தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் ஞ்சி ராம், ஆனந்த் தத்தா, பர்வேஷ்குமார், தீபக் கஜூரியா, சுரேந்தர் வர்மா, திலக் ராஜ் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விஷால் என்பவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். முதன்மை குற்றவாளிகளான சஞ்சிராம், பர்வேஷ் குமார், தீபக் கஜூரியா ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3 பேருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    English summary
    The verdict in the Kathua gang rape-cum-murder case will be delivered by Pathankot Judge Tejwinder singh on Today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X