For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்டப்பஞ்சாயத்து மூலம் திருமண உறவை பிரிப்பது சட்ட விரோதம்: சுப்ரீம் கோர்ட்

கட்டப்பஞ்சாயத்து மூலம் திருமண உறவை பிரிப்பது சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

டெல்லி: கணவன் -மனைவி இடையே ஏற்படும் பிரச்னைகளை 3வது நபர் தலையிட்டு தீர்க்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டப்பஞ்சாயத்து மூலம் 3வது நபர் தலையீடு இருப்பதாலேயே கவுரவ கொலைகள் நடைபெற வழிவகுக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பான மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாட்டில் பல்வேறு கவுரவ கொலைகள் நடைபெற்று வருகின்றன. அவற்றை எல்லாம் நீதிமன்றங்கள் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே தான் இருக்கின்றன.

Kattapanyathu divorce is illegal says Supreme court

கட்டப் பஞ்சாயத்து செய்து கணவன்- மனைவியை பிரிப்பவர்களிடம் இருந்து, அந்த தம்பதிகளை பாதுகாக்க என்னென்ன வழிகளை கையாளலாம் என்பது குறித்து ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வழங்க மத்திய அரசும், மனுதாரர்களும் முன்வர வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர்.

கணவன் -மனைவி இடையே ஏற்படும் பிரச்னைகளை 3வது நபர் தலையிட்டு தீர்க்கக் கூடாது. கட்டப்பஞ்சாயத்து மூலம் 3வது நபர் தலையீடு இருப்பதாலேயே கவுரவ கொலைகள் நடைபெற வழிவகுக்கப்படுகிறது.

கட்டப் பஞ்சாயத்து செய்து கணவன்- மனைவியை பிரிப்பவர்களிடம் இருந்து அந்த தம்பதிகளை பாதுகாக்க என்னென்ன வழிகளை கையாளலாம் என்பது குறித்து ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வழங்க மத்திய அரசும், மனுதாரர்களும் முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

English summary
The Supreme Court has held that there is no legal sanctity attached to verdicts of village panchayats, including khaps, that touch personal lives of couples, even if the community accepts such decisions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X