For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னா பாஸ்ட்.. ஆட்சி கலைந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சந்திரசேகரராவ்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானா அரசை கலைத்த அடுத்த சில மணிநேரங்களில் தங்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியலை மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் வெளியிட்டார்.

தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆட்சி அமைத்து வந்தது. இந்நிலையில் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி கடந்த 2014-ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றது. இந்த ஆட்சியின் காலம் வரும் 2019-ஆம் ஆண்டு வரை உள்ளது.

KCR releases full list of TRS candidates for Telangana assembly elections

எனினும் நேற்று கூட்டப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டசபையை கலைப்பதாக தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் அளித்தார். தேர்தல் முடியும் வரை பொறுப்பு முதல்வராக செயல்படுமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து சில மணிநேரங்களில் 105 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை சந்திரசேகர ராவ் வெளியிட்டார். இந்த 105 பேரில் 103 பேர் தற்போது எம்எல்ஏக்களாக இருப்பவர்களே ஆவர்.

ஆனால் மீதமுள்ள இரு தொகுதிகளுக்கு மட்டும் தற்போதைய எம்எல்ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என்றார்.

புதிய தேர்தல் வரும் நவம்பரில் நடத்தப்படும் என்பதில் சந்தேகமே இல்லை. விரைந்து முன்கூட்டியே நடத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் பேசியுள்ளேன் என்றும் ராவ் தெரிவித்தார்.

English summary
Telangana state assembly on Thursday, ruling TRS announced candidates for all constituencies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X