For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பள்ளி பிள்ளைகளிடம் கேட்கும் கேள்வியா இது? கனகராஜ் கோபம்.. வினாத்தாளால் சர்ச்சை

Google Oneindia Tamil News

Recommended Video

    பள்ளி பிள்ளைகளிடம் கேட்கும் கேள்வியா இது? - கனகராஜ் கோபம்

    டெல்லி: இப்படியும் தேர்வில் கேள்விகள், கேட்கப்படுமா என்று நினைக்குமளவுக்கு சர்ச்சைக்குரிய கேள்விகளை கேந்திரிய வித்யாலயா பள்ளி தேர்வில் எழுப்பியுள்ளார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கனகராஜ்.

    இது தொடர்பாக திடுக்கிடும் தகவலை தனது ட்விட்டர் தளத்தில் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.

    அதில் வினாத்தாள் ஒன்றின், புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அத்துடன் சர்ச்சைக்குரிய கேள்விகள் கட்டமிட்டு காட்டப்பட்டுள்ளன.

    நாடு மோசமான நிலைக்கு போகிறது.. கடிதம் எழுதிவிட்டு கலெக்டர் சசிகாந்த் செந்தில் திடீர் ராஜினாமா!நாடு மோசமான நிலைக்கு போகிறது.. கடிதம் எழுதிவிட்டு கலெக்டர் சசிகாந்த் செந்தில் திடீர் ராஜினாமா!

    தலித் வாழ்க்கை

    தலித் வாழ்க்கை

    அதில் ஒரு கேள்வியில், தலித் என்றால் யார் என்று கேட்கப்பட்டு, அதற்கு நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று, 'வெளிநாட்டினர்', இன்னொன்று, 'தீண்டத்தகாதவர்கள்', 'நடுத்தர வர்க்கத்தினர்' மற்றும் 'உயர் வர்க்கத்தினர்' ஆகியவையாகும்.

    முஸ்லீம்கள்

    இதற்கு அடுத்த கேள்வியும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. முஸ்லிம்கள் தொடர்பாக, உள்ள பொதுவான அபிப்பிராயம் என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டு, 'முஸ்லிம்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவதில்லை', 'அவர்கள் முழுக்க சைவம் மட்டுமே சாப்பிடுபவர்கள்', 'நோன்பு காலகட்டத்தில் அவர்கள் தூங்குவது கிடையாது', போன்ற ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு, நான்காவது ஆப்ஷனாக, 'இவை அனைத்தும்' என்றும் ஒரு பதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

    6வது வகுப்பு

    கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 6ம் வகுப்பு தேர்வில் இப்படி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்திலேயே விளக்கமும் அளித்துள்ளார். இதுதொடர்பான முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாக வேண்டியுள்ளது.

    நெட்டிசன்கள் கருத்து

    கனகராஜின் டிவிட்டர் பக்கத்தில் நெட்டிசன்கள் பலரும், இந்த கேள்வித்தாளுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். பிஞ்சு மனதில் நஞ்சு விதைக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டி கருத்துக்களை பதிவிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. சிலர் இதுதொடர்பாக வழக்கு தொடுக்க முடியாதா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த கேள்வித்தாளின் உண்மைத்தன்மை குறித்து, பள்ளி நிர்வாகம்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

    English summary
    Kendriya Vidyalaya school reportedly asks controversial questions on Dalits and Muslims over their life style.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X