• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிரைவர் ஸ்டியரிங் பிடிக்க.. 2 இளம் பெண்கள் கியர் மாற்ற.. கடைசில 6 மாதத்துக்கு லைசென்ஸ் போச்சேப்பா!

|
    கியர் மாற்ற இளம்பெண்களை அனுமதித்த பஸ் டிரைவர்.. சஸ்பெண்ட்

    பாலக்காடு: "காந்த கண்ணழகி.. லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் முத்து பல் அழகி.. சோடி சேர வாடி" என்று பாட்டு சத்தம் ஒலிக்க.. டிரைவருக்கு நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு பஸ் கியரை மாற்றுகிறார்கள் கல்லூரி பெண்கள்! இந்த வீடியோ வெளியாகி 2 நாள் ஆகியும் இன்னமும் அதன் அதிர்ச்சி குறையாமல் பொதுமக்கள் கண்டு வருகின்றனர்.

    கேரளாவின் கல்பெட்டா பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ இது.. தனியார் பஸ்ஸில் டிரைவர் வண்டி ஓட்டி வருகிறார்... அவர் பெயர் ஷாஜி, 35 வயதாகிறது.

    அவரை சுற்றி கல்லூரி பெண்கள் உட்கார்ந்துள்ளனர்... அந்த பெண்கள் படு ஸ்டைலாக டிரஸ் அணிந்துள்ளனர். சிலர் டிரைவருக்கு நெருக்கமாக உட்கார்ந்திருக்க, மேலும் சிலர் அவருக்கு பக்கத்தியே சுற்றி நின்று கொண்டிருக்கிறார்கள்.

    அரை நிர்வாண பெண்.. பெண் போலீஸார் மீது பாய்ந்து பாய்ந்து தாக்குதல்.. கடித்து குதறிய பரபரப்பு வீடியோஅரை நிர்வாண பெண்.. பெண் போலீஸார் மீது பாய்ந்து பாய்ந்து தாக்குதல்.. கடித்து குதறிய பரபரப்பு வீடியோ

    கியர் மாற்றுகிறார்கள்

    கியர் மாற்றுகிறார்கள்

    "கும்முறு டப்பர.. கும்முறு டப்பர.. கும்முறு டப்பர.. கும்முறு டப்பர.. கும்மறு கும்மறு கும்மறு கும்மாறா.." என்று கும்மென்று பஸ்ஸுக்குள் பாட்டு சத்தம் கேட்கிறது... அந்த பாட்டுக்கு ஏற்ப பஸ்ஸில் கியர் மாற்றுகிறார்கள் இளம் மாணவிகள்.

    காந்த கண்ணழகி

    காந்த கண்ணழகி

    தொடர்ந்து "காந்தக் கண்ணழகி, லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் முத்து பல் அழகி.. சோடி சேர வாடி" என்று பாட்டு கேட்க, அதற்கும் ஆர்வத்துடன் கியர் மாற்றுகிறார்கள் பெண்கள். இப்படி கியர் மாற்றும்படி சொல்வது டிரைவர்தான்.. அதுவும் சிரித்தபடியே பெண்கள் கியர் மாற்றுவதை ரசிக்கிறார்.. ஸ்டியரிங்கை வளைத்து வளைத்த சுற்றுகிறார்.

    டிரைவர்

    டிரைவர்

    இதை பார்த்து அதிர்ந்தனர் பயணிகள்.. பஸ்ஸில் இருந்த ஒருவர் இதை வீடியோ எடுத்து, இணையத்திலும் போட்டுவிட்டார்.. அதுதான் 2 நாளாக அதிர்ச்சியை தந்து வருகிறது. இந்த டிரைவருக்கு ஏகப்பட்ட பேர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

    சஸ்பெண்ட்

    சஸ்பெண்ட்

    சாலை பாதுகாப்பு இவர்களுக்கு விளையாட்டாக போய்விட்டதா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். கடைசியில், இந்த வீடியோ ஆர்டிஓ பார்வைக்கு செல்ல, உடனடி விசாரணை மேற்கொண்ட அவர், டிரைவர் ஷாஜியை 6 மாசம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

    English summary
    kerala private bus driver allowed college girls to shift gear and his driving licence suspended, this shocking video goes viral on socials
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X