For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வந்தது ஓணம்... விழாக்கோலத்தில் கேரளா

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள மக்களின் பராம்பரிய பண்டிகையான ஓணம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் கேரளா முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

கேரளாவில் சாதி, மத பேதமின்றி இந்த பண்டிகையை மலையாளிகள் கொண்டாடி வருகின்றனர். பண்டைய காலத்தில் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னனின் நினைவாக இந்த பண்டிகையை மலையாளிகள் கொண்டாடி வருகின்றனர்.

Kerala celebrates Onam today

மலையாள புது வருடத்தின் முதல் மாதமான சிங்ஙம் மாதத்தில் அஸ்தம் நாளிலில் இருந்து 10வது நாள் திருவோண நாளாகும். இந்த 10 நாட்களிலும் மலையாளிகள் வீட்டின் முன் அத்தப் பூ கோலம் போடுவார்கள். இந்த வருடம் அஸ்தம் நாள் கடந்த 29ம் தேதியாகும். இன்று 7ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கேரளாவே விழாக்கோலம் பூண்டுள்ளது.

திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு உள்பட முக்கிய நகரங்களில் மின் விளக்குககளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று மாலையாளிகள் அதிகாலையே எழுந்து வீடடு முன்பு அத்தப் பூ கோலம் போட்டு கொண்டாட்டங்களைத் தொடங்கினர். கடந்த 9 நாட்களிலும் சிறிய அளவில் தான் கோலமிடுவர். ஆனால் இன்று மகாபலி மன்னனை வரவேற்பதற்காக பெரிய பூக்கோலம் இடுவார்கள்.

திருவோண நாள் அன்றுதான் மகாபலி மன்னன் அனைவரது வீடுகளுக்கும் வருவதாக ஐதீகம். பின்னர் அனைவரும் புத்தாடை அணிந்து கோயிலுக்கு செல்வார்கள்.

திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் திருவோண நாளன்று ஓம் சத்யா எனப்படும் சைவ சாப்பாடுதான் வீடுகளில் பறிமாறப்படும். ஆனால் கோழிக்கோடு,கண்ணூர் உள்பட பல இடங்களில் மட்டன், சிக்கன் வகை அசைவ சாப்பாடு வழங்கப்படும்.

English summary
People of Kerala celebrated Onam festival today with tradidion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X