For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி பல்கலைக்கழகத்தில் மொழி பாகுபாடு.. மோடிக்கு கேரள முதல்வர் கடிதம்! என்ன செய்கிறார் எடப்பாடி?

டெல்லி பல்கலைக்கழகத்தின் மொழி பாகுபாடு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: டெல்லி பல்கலைக்கழகத்தின் மொழி பாகுபாடு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மொழி பாகுபாடு அரசியலமைப்பின் விதிமீறல் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் தமிழ், கன்னடா, மலையாளம், ஒரியா, நேப்பாளி உள்ளிட்ட மொழிகள் பாடத்திட்டத்தில் இல்லை என அறிவித்துள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மொழி பாகுபாட்டால் மாணவர்கள் கல்வியில் சோபிக்க முடியாத நிலை ஏற்படும் என சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடி மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அரசியலமைப்பின் மீறல்

அரசியலமைப்பின் மீறல்

அதில் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் மொழிகளுக்கு எதிரான பாகுபாடு அரசியலமைப்பின் மீறல் என தெரிவித்துள்ளார். மேலும் மொழி பாகுபாடு காரணமாக கேரளாவில் இருந்து பல மாணவர்கள் டெல்லி பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மொழிகள் பட்டியலிடப்பட வேண்டும்

மொழிகள் பட்டியலிடப்பட வேண்டும்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் பட்டியலிடப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் கல்லூரி தீன் தேவேஷ் சின்கா அதுபோன்ற கடிதம் எதுவும் என கிடைக்கவில்லை என கூறியுள்ளார். கடிதம் வந்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பல முறை கடிதம்

பல முறை கடிதம்

15 ஆண்டுகளுக்கு முன்பு நான் டெல்லி பல்கலைக்கழகத்துக்கு வந்த போது இந்த மொழிகளை மேம்படுத்தக்கோரி பலமுறை கடிதம் எழுதியிருப்பதாக கூறியுள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கும் எடுக்கப்படவில்லை என்றும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

என்ன செய்கிறார் எடப்பாடி?

என்ன செய்கிறார் எடப்பாடி?

மலையாள மொழிக்காக கேரள முதல்வர் பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த விவகாரம் குறித்து இதுவரை வாய்திறக்காமல் உள்ளார். தமிழக மாணவர்கள் குறித்து கொஞ்சமும் கவலைப்படாமல் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்து தனது பதவியை காப்பாற்றிக்கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளார்.

English summary
Kerala CM Vijayan writes letter to the prime minister Modi on the issue of language discrimination’ in Delhi University.In that letter to Prime Minister Narendra Modi and HRD Minister Prakash Javadekar, Vijayan said that “the discrimination towards languages in the Eighth Schedule of the Constitution is a violation of the Constitution”.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X