For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நல்லாப் பாருங்க, நான் குடிச்சது டீ... விளக்குகிறார் கேரள கம்யூனிஸ்ட் தலைவி சிந்தா

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சங் பரிவார் அமைப்புகளை கடுமையாக விமர்சித்து வரும் கேரள மாநில, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் சிந்தா ஜெரோம், கையில் கிளாஸுடன் இருப்பது போன்ற புகைப்படம் சர்ச்சையைக் கிளப்பி விட்டது. ஆனால் அது தேநீர்தான் என்று சிந்தா விளக்கம் அளித்துள்ளார்.

சிந்தா ஜெரோம், முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியக் கமிட்டியில் உறுப்பினராக இருந்தவர். தற்போது டைஃபி எனப்படும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார்.

இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கடும் விமர்சகர் ஆவார். இவரது கருத்துக்கள் பலமுறை சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. பாஜகவையும், பிரதமர் மோடியையும் கூட இவர் விட்டு வைத்ததில்லை. இந்த நிலையில் இவர் கையில் கிளாஸுடன் இருப்பது போன்ற படம் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கையில் கிளாஸுடன்

கையில் கிளாஸுடன்

கைரளி டிவியின் பி.கே.சுனில்நாத்துக்கு அளித்த போட்டியின்போது எடுக்கப்பட்ட படமாகும் இது. அதில் சுனில்நாத்தும், இவரும் கையில் கிளாஸுடன் உள்ளனர்.

மது அல்ல தேநீர்

மது அல்ல தேநீர்

இதையடுத்து சிந்தா மது அருந்துகிறார். இதன் மூலம், இடதுசாரிகள் கேரளாவில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் மது விலக்கை நீக்கி விடுவார்கள் என பலரும் பேஸ்புக்கில் பிரசாரமே செய்ய ஆரம்பித்து விட்டனர். ஆனால் தான் அருந்தியது மது அல்ல, தேநீர் என்று விளக்கம் அளித்துள்ளார் சிந்தா.

பால் கலக்காத தேநீர்

பால் கலக்காத தேநீர்

நான் பால் கலக்காத தேநீர்தான் அருந்தினேன். அதில் உள்ளது மது அல்ல. இந்தப் படத்தை வைத்து என்னை குடிகாரி என்பது போல சிலர் விஷப் பிரசாரம் செய்கின்றனர். அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார் சிந்தா.

வீடியோவைப் பாருங்கள்

இதுதொடர்பான வீடியோவைப் பாருங்கள். எனது தாயார் இரு தேநீர்க் கோப்பைகளை எடுத்து வந்து தருகிறார். ஆனால் என்னைப் பற்றி அவதூறு பரப்ப வேண்டும் என்பதற்காகவே சங் பரிவார் அமைப்பினர் இப்படி குயுக்தியாக பிரசாரம் செய்கின்றனர் என்று கூறியுள்ளார் சிந்தா.

English summary
Kerala DYFI leader Chintha Jerome has clarified that she had drinks with Journalist Sunil Nath during an interview.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X