For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி.. வயது வரம்பை வெளியிட்ட கேரள அரசு

Google Oneindia Tamil News

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை கேரள அரசு நிர்ணயம் செய்துள்ளது. 50 முதல் 65 வயதுக்கு உள்பட்ட பெண்களே தரிசனம் செய்ய முடியும்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு , உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் அனுமதி அளித்துதீா்ப்பளித்தது.

Kerala fixed an age limit for women to worship at the Sabarimala Iyappan Temple

அந்த தீா்ப்பை அமல்படுத்த முயன்ற கேரள அரசை எதிர்த்து, பல்வேறு ஹிந்து அமைப்புகளும், ஆன்மிக அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. பெண்களின் உரிமையை மறுக்க முடியாது என்றும் கேரள அரசு விளக்கம் அளித்தது.

சபரிமலை ஐயப்ப பக்தா்களின் சேவைகளுக்காக, கேரள காவல் துறையுடன் இணைந்து புதிய வலைதளத்தை திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் (டிடிபி) தொடங்கி இருக்கிறது. அந்தவலைதளத்தில் '50 வயதுக்கும் குறைவான பெண்களும், 65 வயதுக்கும் மேற்பட்ட பெண்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை : தவம் செய்யும் இடத்தை அம்பு எய்து தேர்வு செய்த ஐயப்பன்... ஆலயம் எழுப்பிய பரசுராமர்சபரிமலை : தவம் செய்யும் இடத்தை அம்பு எய்து தேர்வு செய்த ஐயப்பன்... ஆலயம் எழுப்பிய பரசுராமர்

இதற்கு முன்பு, கொரோனா நோய்த்தொற்று காரணமாக, 10 வயதுக்கும் குறைவான சிறுமிகளும், 65 வயதுக்கும் மேற்பட்ட பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதி இல்லை என்று கேரள அரசு அறிவித்து இருந்தது. இப்போது 50முதல் 65 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி என்று அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் மூலம் சபரிமலையில் இளம் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.கொரோனா காரணமாக 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. 65 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

English summary
The Government of Kerala has fixed an age limit for women to worship at the Sabarimala Iyappan Temple. Only women between the ages of 50 and 65 can perform darshan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X