For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளா வெள்ளம்: மத்திய அரசு போதுமான ஹெலிகாப்டர் வழங்கவில்லை.. பினராயி விஜயன் வருத்தம்

கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், மீட்பு பணிகளுக்கு போதுமான ஹெலிகாப்டர்களை மத்திய அரசு வழங்கவில்லை என்று பினராயி விஜயன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், மீட்பு பணிகளுக்கு போதுமான ஹெலிகாப்டர்களை மத்திய அரசு வழங்கவில்லை என்று கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

கேரளாவில் கடந்த இரண்டு வாரமாக பெரிய அளவில் மழை பெய்கிறது. இதனால் அங்கு பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

14 மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக மலை பகுதிகளான இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

கேரளா வெள்ளம் காரணமாக தற்போது பலி எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 42 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். மேலும் 300 க்கும் அதிகமானோர் வெள்ளத்தில் காணவில்லை. நிலச்சரிவு காரணமாகவும், நீரில் மூழ்கியது காரணமாகவும் இவ்வளவு மரணம் நிகழ்ந்துள்ளது.

மீட்பு பணிகள்

மீட்பு பணிகள்

கேரளாவில் ராணுவமும், பேரிடர் மீட்பு படையினரும் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 2 வாரமாக மீட்பு பணியில் ஈடுபட்டும் கூட மக்களை காப்பாற்ற முடியவில்லை. 18 தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு அணிகள் இதில் ஈடுப்பட்டுள்ளது. மொத்தம் 756 வீரர்கள் களத்தில் உள்ளனர். இது இல்லாமல் ராணுவ வீரர்கள், போலீசாரும் உள்ளனர். 250 படகுகள், 23 ஹெலி���ாப்டர்கள் தற்போது மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளது .

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இந்த நிலையில்தான் மத்திய அரசு விமானம் வழங்கவில்லை என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் புகார் அளித்துள்ளார். தற்போது இருக்கும் விமானிகள் போதிய எண்ணிக்கையில் இல்லை. மொத்த மாநிலமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திற்கு இரண்டு ஹெலிகாப்டர்களை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. எரிபொருள் பிரச்சனையால் அதுவும் முடியவில்லை என்று கூறியுள்ளார்.

படகில்

படகில்

கேரளாவில் உள்ள படகுகளை வைத்தே மக்கள் மீட்கப்படுகிறார்கள். அதிலும் பெரும்பாலானது மக்கள் பயன்படுத்தும் படகுகள். தற்போது அங்கு 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளாகி இருக்கிறார்கள். 500க்கும் அதிகமான மக்கள் காணாமல் போய் உள்ளனர். ஆனால் 30 ஆயிரம் மக்கள் மட்டுமே முழுமையாக மீட்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kerala Floods: Center didn't give enough helicopters for rescue says Kerala CM Pinarayi Vijayan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X