For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயிருக்கு போராடிய குழந்தை.. வெள்ளத்தில் உடையப் போகும் பாலம்.. காப்பாற்றிய வீரர்.. திக் திக் வீடியோ

கேரளாவில் பாலம் ஒன்றில் குழந்தையை வேகமாக தூக்கிக் கொண்டு ஓடும் வீரர் ஒருவரின் வீடியோ வைரலாகி உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளா வெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றியவர்- வீடியோ

    இடுக்கி: கேரளாவில் வெள்ளம் உடைக்க போகும் பாலம் ஒன்றில் குழந்தையை வேகமாக தூக்கிக் கொண்டு ஓடும் வீரர் ஒருவரின் வீடியோ வைரலாகி உள்ளது.

    கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு பெரிய அளவில் பாதிப்பு அடைந்துள்ளது. இங்கு சிக்கி இருக்கும் மக்களை காப்பாற்ற மீட்பு படையினர் போராடி வருகிறார்கள்.

    இடுக்கியில் வெள்ளம் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. அங்கு நேற்று முதல் நாள் நிகழ்ந்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் வைரலாகி உள்ளது. கன்ஹையா குமார் என்ற பேரிடர் மீட்பு படை வீரர் ஒருவர், குழந்தை ஒன்றை காப்பாற்றும் வீடியோ பெரிய வைரலாகி உள்ளது.

    யார் இவர்

    கன்ஹையா குமார், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவில் பணியாற்றுகிறார். இவர் சுமார் 6 வருடமாக அந்த பணியில் இருக்கிறார். சென்னை வெள்ளம், குஜராத் வெள்ளம், மும்பை வெள்ளம், கேதார்நாத் நிலச்சரிவு என்று இந்தியாவை உலுக்கிய முக்கியமான பேரழிவு சம்பவங்கள் எல்லாவற்றிலும் இவர் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். இந்தநிலையில்தான் கேரளாவிற்கு மீட்பு பணியில் ஈடுபட வந்துள்ளார்.

    சரியில்லை

    கேரளாவில் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கும் இடுக்கியில் இவருக்கு பணி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் கிராமம் ஒன்றில் வெள்ளம் புகும் முன் மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற டாஸ்க் இவரின் குழுவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவராக மீட்ட கன்ஹையா குமார், ஒரு வீட்டில் மோசமான உடல்நிலையில் உயிருக்கு போராடிய சிறுவன் ஒருவரை பார்த்துள்ளார்.

    மிக மோசமான பாலம்

    மிக மோசமான பாலம்

    அந்த சிறுவனை, அங்கு இருக்கும் ஆற்றை கடந்து கொண்டு சென்றதால்தான் மருத்துவமனையில் சேர்க்க முடியும். அப்போது மட்டுமே அவனை காக்க முடியும். ஆனால் அந்த பாலத்தை கடப்பதற்குள் வெள்ளம் வந்து விடும். எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக ஓட வேண்டும். இந்த நிலையில்தான், கொஞ்ச கூட யோசிக்காமல் அந்த சிறுவனை தூக்கிக் கொண்டு ஓடி இருக்கிறார் கன்ஹையா குமார்.

     வேகமாக காப்பாற்றினார்

    வேகமாக காப்பாற்றினார்

    சிறுவனின் அப்பா பின்பக்கம் வந்துள்ளார். இவர் சரியாக பாலத்தில் ஓடும் போது, அவர் கால்களை வெள்ளம் நனைத்துள்ளது. ஆனால் அவர் கொஞ்சம் கூட பயப்படாமல், சிறுவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு படுவேகமாக ஓடியுள்ளார். ஓடிய வேகத்தில் மருத்துவமனையில் சென்று சேர்த்துள்ளார். அவர் சென்ற அடுத்த நொடி அந்த பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது.

    பிழைத்தது

    பிழைத்தது

    அந்த சிறுவனை நேரடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளார். 3 வயது ஆகும் சிறுவனுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தற்போது அவனது உடல் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவனின் பெற்றோர்கள், கன்ஹையா குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

    ரியல் ஹீரோவின் நன்றி

    இதுகுறித்து கன்ஹையா குமார் ''இது என்னுடைய பணி. 6 வருடமாக செய்வதால் எனக்கு இதில் அனுபவம் இருக்கிறது. என்னை இந்தியா முழுக்க பிரபலபடுத்திய கேரளா மக்களுக்கு நன்றி. அன்று நான் யோசிக்கவேயில்லை. அந்த குழந்தையை எப்படி காப்பற்றவேண்டும் என்று மட்டுமே நினைத்தேன். அதனால் பாலத்தின் மீது துணிச்சலாக ஓடினேன்'' என்றுள்ளார்.

    பெரிய வைரல்

    இந்த புகைப்படம் கேரளாவின் பிரபல, மனோரமா நாளிதழில் வந்துள்ளது. மிக சரியாக அவர்கள் கடக்கும் போது புகைப்படக்காரர் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இதை படம் பிடித்துள்ளார்.

    English summary
    Kerala Floods: Meet the Man Kanhaiya Kumar, Who rescues a boy boldly from the flood.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X