For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹெலிகாப்டர் மூலம் மீட்ட கடற்படையினருக்கு மொட்டை மாடியில் நன்றி என பெயிண்ட் செய்த கேரள மக்கள்!

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கடற்படையினருக்கு நன்றி என பெயிண்ட் செய்த கேரள மக்கள்! Someone painted a 'Thanks' to navy

    கொச்சி: ஹெலிகாப்டர் மூலம் மீட்ட கடற்படையினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மொட்டை மாடியில் நன்றி என்று பெயிண்ட் அடித்துள்ளனர் கொச்சி குடும்பத்தினர்.

    தென் மேற்கு பருவமழையின் தீவிரத்தால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட
    மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் கேரள மாநிலம் வரலாறு காணாத வெள்ள காடாக மாறியது.

     Kerala floods: Someone wrote a big Thanks on their rooftop in Kochi

    வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து, மாநில முதல்வர்கள் மூலம் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் நிவாரண பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன.

    தமிழ், மலையாள திரைத்துறையினரும் தங்களால் முடிந்த பண உதவிகளை வழங்கி வருகின்றனர். நமது அண்டை மாநிலமான கேரளாவிற்கு மற்ற மாநிலங்கள் மட்டும் அல்லாமல் தன்னார்வ தொண்டு நிறுவங்களும் உதவி செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் மழை சற்று ஓய்வு எடுத்துள்ளதால் கேரள மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகினறனர். எதையும் எதிர்பார்க்காமல் மீனவர்கள் , ராணுவ வீரர்கள் , பேரிடர் பாதுகாப்பு படையினர் என அனைவரும் ஒன்றிணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கொச்சியில் கடந்த 17-ஆம் ஆண்டு மாடியில் சிக்கிய இரு பெண்களை கடற்படை கமாண்டர் விஜய் என்பவர் ஹெலிகாப்டர் கொண்டு மீட்டார். இதற்கு நன்றித் தெரிவிக்கும் விதமாக அந்த வீட்டின் மொட்டை மாடியில் நன்றி (தேங்க்ஸ்) என்று பெயிண்ட் அடிக்கப்பட்ட காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

    செய்தி: திவ்யபாலா

    English summary
    Kerala floods: Someone painted a huge 'Thanks' on their rooftop where Navy rescued two women. The note of gratitude is now being highly appreciated on social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X