For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்கிருந்தாலும் காக்க வருவோம்.. மாற்றுத்திறனாளியை மாடியிலிருந்து மீட்டு அசத்திய ராணுவம்- வீடியோ இதோ!

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    மாற்றுத்திறனாளியை மாடியிலிருந்து மீட்டு அசத்திய ராணுவம்- வீடியோ

    திருவனந்தபுரம்: செயற்கை கால் பொருத்தியுள்ள இளைஞரை வெள்ளம் சூழ்ந்த வீட்டில் இருந்து ராணுவத்தினர் மீட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    கேரளத்தில் வரலாறு காணாத மழை பெய்ததால் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் வெள்ள நீரில் தத்தளித்தனர். சிலர் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி விட்டனர்.

     Kerala Floods: Video Of Army Rescuing Man with artificial limb

    இன்னும் சிலரோ வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தத்தளித்தனர். முப்படை வீரர்கள், மீனவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர் குறித்து வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    அவர்களுக்கு பாராட்டும் குவிகிறது. இன்ஸ்டாகிராமில் இந்திய ராணுவத்தினரால் போஸ்ட் செய்யப்பட்ட அந்த வீடியோவில் வெள்ளம் பாதித்த வீட்டிலிருந்து செயற்கைகால் பொருத்திய நபரை மீட்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    Wherever you are #wewillsaveyou #havefaith #IndianArmy #OpMadad #Keralafloods2018

    A post shared by Indian Army (@indianarmy.adgpi) on

    அதில் 5 ராணுவ வீரர்கள் சேர்ந்து அந்த நபரை ஏணியிலிருந்து இறக்கிவிடும் காட்சிகள் உள்ளன. இவர்கள் கார்வால் ரைபிள்ஸ் ரெஜிமென்ட் படையை சேர்ந்தவர்கள்.

    இந்த வீடியோ போஸ்ட் செய்யப்பட்ட சில மணி நேரங்களில் 62 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். நூற்றுக்கணக்கானோர் பாராட்ட தொடங்கினர். மேலும் அந்த வீடியோவில் நீங்கள் எங்கிருந்தாலும் நாங்கள் உங்களை காப்போம் "Wherever you are #wewillsaveyou," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    English summary
    The video shows five army personnel helping the unidentified man climb down a ladder. The man appears to be stranded on the first floor of a house in a flood-affected area. Though it is not clear where in Kerala the rescue took place.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X