For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ 10 லட்சம் நிவாரணம்.. பினராயி அறிவிப்பு

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ 10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். முன்னதாக கேரள ஆளுநர் ஆரிப்முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

கோழிக்கோடு விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கிய போது ரன்வேக்கு அப்பால் உள்ள 35 அடி ஆழ பள்ளத்தில் விமானம் இரண்டாக பிளந்து கொண்டு விபத்து ஏற்பட்டது.

Kerala Governor and CM meets injured people in Kozhikode plane crash

இந்த விபத்தில் சிக்கி 19 பேர் பலியாகிவிட்டனர். 142 பேர் காயமடைந்து கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவோரை கேரள ஆளுநர் ஆரிப்முகமது கானும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

கோழிக்கோடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த இருவருக்கு கொரோனா உறுதி கோழிக்கோடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த இருவருக்கு கொரோனா உறுதி

இதைத் தொடந்து பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் விமான விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 10 லட்சம் வழங்கப்படும். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோரின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும். இறந்த விமான பயணிக்கு கொரோனா என்பதால் அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு மீட்பு படையினருக்கும் அரசு சார்பில் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றார்.

Recommended Video

    கேரளா விமான விபத்து | விமான போக்குவரத்து இயக்குநரகம் என்ன சொல்கிறது?

    English summary
    Kerala Governor and CM meets injured people in Kozhikode plane crash.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X