For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. கேரள கவர்னர் ஆரிஃப் முகம்மது கான் தரிசனம்!

Google Oneindia Tamil News

பத்தனம்திட்டா: கேரள கவர்னர் ஆரிஃப் முகம்மது கான் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

தமிழகத்தை போன்று கேரளாவிலும் கொரோனா தொற்று ஜெட் வேகத்தில் சென்று வருகிறது. அங்கு தினமும் 6,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

Kerala Governor Arif Mohammad Khan performed Sami Darshan at Sabarimala Iyappan Temple

கொரோனவை தடுக்க மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா பரிசோதனை செய்து தொற்று நெகட்டிவ் என்று இருந்தால் மட்டுமே பக்தகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று உத்தரவு போடப்பட்டது.தினமும் 10,000 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் விஷூ பண்டிகை, சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. வழக்கம் போல் இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கேரள மாநில கவர்னர் ஆரிஃப் முகம்மது கான் சபரிமலை ஐயப்பன் கோவிலில்சாமி தரிசனம் செய்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

English summary
Kerala Governor Arif Mohammad Khan performed Sami Darshan at Sabarimala Iyappan Temple
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X