For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்கள்.. ஒரு மாத சம்பளத்தை வழங்கிய கேரள ஆளுநர் சதாசிவம்!

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனது ஒரு மாத சம்பளத்தை கேரள ஆளுநர் சதாசிவம் முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனது ஒரு மாத சம்பளத்தை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அம்மாநில ஆளுநர் சதாசிவம் வழங்கியுள்ளார்.

அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கரையை கடக்காமலேயே கடலில் இருந்தபடியே தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவை சூறையாடியது. இதனால் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

Kerala Governor given one-month salary to the Chief Minister's relief fund for Ockhi cyclone

ஓகி புயல் குறித்து வானிலை மையம் சரியான நேரத்தில் எச்சரிக்காததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ள முடியவில்லை என கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்திருந்தார். இதனால் பலத்த சேதம் ஏற்பட்டதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அம்மாநில ஆளுநர் சதாசிவம் நிதியுதவி அளித்துள்ளார். கேரள மாநில ஆளுநர் சதாசிவம் தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர்களும் தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்குவர் என்று சதாசிவம் தெரிவித்துள்ளார்.

English summary
Governor Sathasivam has given his one-month salary to the Chief Minister's relief fund for the people suffered by the Ockhi cyclone. Sathasivam said that employees who work in the Governor's House will pay their one-day wage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X