For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆளுநர் சதாசிவம் கார் ஓவர் ஸ்பீட்... அபராதம் விதித்த கேரள போலீஸ்!

மிகவும் அதிக வேகத்தில் சென்றதால், கேரள மாநில ஆளுநர் சதாசிவத்தின் காருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    அதிவேகமாக சென்றதால் கேரளா ஆளுநரின் காருக்கு அபராதம்

    திருவனந்தபுரம்: மிகவும் அதிக வேகத்தில் சென்றதால், கேரள மாநில ஆளுநர் சதாசிவத்தின் காருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

    தமிழகத்தில் தற்போது போக்குவரத்து விதிகளில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி வரும் காலங்களில், கார்களில் உள்ள நான்கு நபர்களும் சீட் பெல்ட் போட வேண்டும். அதேபோல் பைக்கில் செல்பவர்களில், இரண்டு பேரும் ஹெல்மெட் அணிய வேண்டும்.

    Kerala Governor Goes in high speed, Police fined him

    இந்த நிலையில் கடுமையான போக்குவரத்து விதிகள் நிலவும் கேரளாவில், நேற்று முக்கியமான சம்பவம் நடந்துள்ளது. சிறப்பு விதிகள் பாதுகாப்பு கொண்டே ஆளுனரிடமே போக்குவரத்து போலீஸ் கண்டிப்பு காட்டி இருக்கிறது.

    நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை காட்டிலும் கேரள மாநில ஆளுநர் சதாசிவத்தின் கார் அதிக வேகத்தில் சென்றதால் அவரது காருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவரது பென்ஸ் கார் 80 கிமீ வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ரூபாய் 400 அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதலில் போக்குவரத்து காவலர் அபராதம் விதிக்க பயந்து இருக்கிறார், ஆனால் பின் விதிமுறைகளை நினைத்து பார்த்துவிட்டு அப்படி செய்வது தவறு இல்லை என்றதும் அபராத ரசீது கொடுத்துள்ளார்.

    இந்த தகவல் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹெல்மெட் விதிகளை அறிமுகப்படுத்திய போது, நீதிபதிகள் எடுத்துக்காட்டாக கூறியுள்ளனர்.

    English summary
    Kerala Governor Sathasivam Goes in highspeed, Police fined him of Rs.400.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X