For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆளுநர் உரையின்போது மத்திய அரசு, மதவாதத்திற்கு எதிரான வரிகளை படிக்காமல் தவிர்த்த கேரள ஆளுநர் சதாசிவம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் ஆளுநர் உரையின்போது, அரசு தயாரித்து கொடுத்த உரையில் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்களை வாசிக்காமலேயே ஆளுநர் சதாசிவம் தவிர்த்துவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி நடக்கிறது. பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இவ்வாண்டுக்கான, கேரள மாநில சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடர் இன்று துவங்கியது. மரபுப்படி ஆளுநர் உரை நிகழ்த்தினார்.

ஆளுநர் உரையை அரசு தயாரித்து கொடுப்பது அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ள வழக்கம். இதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கிவிட்டு பிறகு சட்டசபையில் அதை வாசிப்பார்.

ஆளுநர் உரை

ஆளுநர் உரை

கூட்டாட்சி தத்துவத்தை மத்திய அரசு மதிக்காமல், மாநில அரசை மீறி மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகங்களை நேரடியாக கட்டுப்படுத்துகிறது என்று பொருள்படும் வரிகளை ஆளுநர் சதாசிவம் படிக்காமல் விட்டுவிட்டார். அதுமட்டுமல்ல, கேரளாவில் சில மதவாத அமைப்புகள், கலவரங்களை தூண்ட திட்டமிட்டுள்ளது என்ற வரிகளையும் ஆளுநர் படிக்காமல் தவிர்த்துவிட்டார்.

மத்திய அரசுக்கு எதிரான வாசகம்

மத்திய அரசுக்கு எதிரான வாசகம்

கூட்டாட்சி தத்துவத்தை மத்திய அரசு மதிக்காமல், மாநில அரசை மீறி மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகங்களை நேரடியாக கட்டுப்படுத்துகிறது என்று பொருள்படும் வரிகளை ஆளுநர் சதாசிவம் படிக்காமல் விட்டுவிட்டார். அதுமட்டுமல்ல, கேரளாவில் சில மதவாத அமைப்புகள், கலவரங்களை தூண்ட திட்டமிட்டுள்ளது என்ற வரிகளையும் ஆளுநர் படிக்காமல் தவிர்த்துவிட்டார்.

மதவாத அமைப்புகள்

மதவாத அமைப்புகள்

"சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில், கேரளா, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது. வாழ்க்கை தரத்தில் டாப் ரேங்கில் உள்ளது. சில மதவாத அமைப்புகள் கேரளாவில் வன்முறையை தூண்டுவதற்கு திட்டமிட்டுள்ளபோதிலும், சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது" என்பதே, ஆளுநர் படிக்காமல் விட்ட அந்த வரிகளாகும்.

கருத்து கூறுவதில்லை

கருத்து கூறுவதில்லை

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம், கேரள முதல்வர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கருத்து கேட்க முயன்றது. ஆனால், இதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஆளுநர் உரை பற்றி அரசு சார்பில் கருத்து கூறுவது கிடையாது என்று முதல்வர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

English summary
The policy address of the LDF government in Kerala by Governor P Sathasivam today at the start of the Assembly session saw him skipping portions critical of the BJP government at the centre. In the printed copy of his address, prepared by by the state government and distributed to legislators and media, there was a reference to the alleged tendency of the central government to "roughshod" the traditions of cooperative federalism by bypassing the state government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X