For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுப்ரீ்ம கோர்ட் உத்தரவிட்டும் மதுக் கடைகளை மூடாமல் டிமிக்கி கொடுக்கும் கேரளா... குடிமகன்கள் ஹேப்பி

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் அதை கேரள அரசு இன்னும் செயல்படுத்தாமல் உள்ளதால் குடிமகன்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை கேரள அரசு இதுவரை செயல்படுத்தவில்லை. இதனால் மது விற்பனை ஜரூராக நடப்பதால் குடிமகன்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் பார்கள், மதுக்கடைகள் நடத்த கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நாடு முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன.

Kerala govt not close liquor shops in NH

இந்த கடைகளை மாற்று இடங்களில் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கேரள அரசு திணறி வருகிறது. இந்நிலையில் எர்ணாவூர் அருகே பரவூர் ரோட்டில் மதுபான கடை இயங்கி வந்தது. இதுவும் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து மூடப்பட்டது.

ஆனால் இடத்தை மாற்றாமலேயே பாரை திறக்க என்ன வழி என்று அதன் உரிமையாளர் யோசித்த நிலையில், இவரின் பாரின் பின்புறம் ஏராளமான காலி இடங்கள் உள்ளன நினைவுக்கு வந்தது.

பாரின் கேட்டை பின் புறத்திற்கு மாற்றினால் 500 மீட்டர் வருமா என்று பார்த்தார். சரிப்படவில்லை. இருப்பினும் கடையின் பின்புறம் உள்ள ரோட்டில் இருந்து கடைக்கு செல்லும் வழியை 500 மீட்டராக மாற்ற திட்டமிட்டார்.

அதன்படி பாருக்கு நடந்து செல்லும் வழியை தியேட்டர் கவுண்டரில் இருப்பது போல குறுக்கும் நெடுக்குமாக அமைத்தார். இந்த வழியாக மதுக்கடைக்கு சென்றால் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 510 மீட்டர் வருகிறது. இதையடுத்து பாருக்கு அனுமதி கோரி அவர் கலால் துறையில் விண்ணப்பம் செய்துள்ளார். இதனால் குடிமகன்கள் குஷியாக உள்ளனர்.

English summary
SC orders Liquor shops within 500 meters from state and national highways should be closed from April 1st. So the bar owners in kerala are seeking alternative places without closing the shops.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X