For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுமியை சீரழித்து விட்டு சவுதிக்கு தப்பிய கயவன்- தட்டி தூக்கிய பெண் சிங்கம் ஐபிஎஸ் மெரின் ஜோசப்

கேரளாவில் மைனர் சிறுமியை பலாத்காரம் செய்து விட்டு சவுதிக்குப் போய் தலைமறைவாக பதுங்கியிருந்த குற்றவாளியை கொல்லம் மாவட்ட காவல்துறை ஆணையர் மெரின் ஜோசப் நேரடியாக சென்று கைது செய்து அழைத்து வந்துள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    IPS Merin joseph | சிறுமியை சீரழித்து தப்பிய கயவன்- தட்டி தூக்கிய மெரின் ஜோசப்

    கொல்லம்: கேரளாவில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு சவுதி நாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவான குற்றவாளியை நேரடியாக சென்று தட்டி தூக்கி வந்த கொல்லம் காவல்துறை ஆணையர் மெரின் ஜோசப்பிற்கு பாராட்டுகள் குவிகின்றன. அதே நேரத்தில் சிறுமியை சீரழித்த கயவனுக்கு மரண தண்டனை அழிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்து வருகிறது.

    பாலியல் குற்றவாளியின் பெயர் சுனில் குமார், 38 வயதான அந்த கயவன் சவுதியில் வேலை செய்து வருகிறான். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊரான கொல்லத்திற்கு வந்தான். தனது நண்பரின் உறவுக்கார பெண்ணான மைனர் சிறுமியைப் பார்த்த சுனில்குமாருக்கு பாலியல் ரீதியான எண்ணம் தோன்றியது.

    நண்பரை பார்க்கும் சாக்கில் அடிக்கடி அவர்களின் வீட்டிற்கு வந்து போனார். பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் சிறுமியை கட்டாயமாக உறவு கொண்டார். இந்த சம்பவம் பல நாட்கள் நடந்தது. ஒரு கட்டத்தில் சுனில்குமாரின் விடுமுறை முடிந்து சவுதி செல்லும் நேரமும் வந்தது. தனக்கு நேர்ந்த கொடுமைகளை பெற்றோரிடம் கூறி அழுதாள் அந்த சிறுமி.

    அதிர்ந்த பெற்றோர்

    அதிர்ந்த பெற்றோர்

    சிறுமியின் மாமாதான் தனது நண்பரான சுனில்குமாரிடம் சிறுமியை அறிமுகம் செய்து வைத்தார். அவளுக்கு இப்படி ஒரு கொடுமை நேர்ந்ததை நினைத்து பெற்றோரும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். போலீசில் புகார் கூறினர். ஆனால் போலீஸ் கைது செய்யும் முன்பாக சவுதிக்கு தப்பிச் சென்று விட்டான் சுனில்.

    பாதிக்கப்பட்ட பெண்

    பாதிக்கப்பட்ட பெண்

    சுனில்குமாரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர். வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. சிறுமியின் இந்த நிலைக்கு தான்தான் காரணம் என்று நினைத்த அந்த சிறுமியின் மாமா தற்கொலை செய்து கொண்டார். இதனால் சிறுமியும் பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

    மரணித்த சிறுமி

    மரணித்த சிறுமி

    பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மகிளா நீதிமன்றத்தை நாடினர். சிறுமி கரிக்கோட்டில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். தனக்கு நேர்ந்த கொடுமைகளை நினைத்து மனம் நொந்து போன சிறுமி மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். கேரளா காவல்துறை இந்த வழக்கை பாதியிலேயே கிடப்பில் போட்டது. சவுதியில் ஜாலியாக பொழுதை கழித்தான் சுனில்குமார்.

    கொல்லம் போலீஸ் கமிஷனர்

    கொல்லம் போலீஸ் கமிஷனர்

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொல்லம் மாவட்ட புதிய காவல்துறை ஆணையராக பொறுப்பேற்றார் மெரின் ஜோசப் ஐபிஎஸ். கிடப்பில் இருந்த பல வழக்குகளை தோண்டி எடுத்து விசாரணை நடத்தினார். அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை மீண்டும் தொடங்கினார்.

    சவுதியில் பதுங்கல்

    சவுதியில் பதுங்கல்

    சுனில்குமாரை பிடிக்க 2017ஆம் ஆண்டே இன்டர்போல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை வழக்கு தொடர்பாக இரு நாட்டு காவல்துறையினரும் மெத்தனம் காட்டி வந்தனர். இதன் காரணமாகவே பல குற்றவாளிகள் கேரளாவில் இருந்து சவுதிக்கு சென்று பதுங்கியுள்ளது தெரியவந்தது.

    குற்றவாளி கைது

    குற்றவாளி கைது

    குற்றவாளியை கைது செய்ய அனைத்து ஆவணங்களையும் தயார் செய்தார் மெரின். சவுதி போலீசாருக்கு அனைத்து ஆவணங்களையும் அனுப்பினார். பதுங்கியிருந்த குற்றவாளியைப் பற்றி கேரளா போலீசாருக்கு சவுதி போலீசார் தெரிவித்த நிலையில் ரியாத்தில் இருந்த குற்றவாளி சுனிலை நேரடியாக சென்று கைது செய்து அழைத்து வந்தார் மெரின் ஜோசப்.

     குற்றவாளிக்கு தூக்கு

    குற்றவாளிக்கு தூக்கு

    நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் போனாலும் கைது பண்ணுவேன் என்று சிங்கம் படத்தில் வசனம் பேசுவார் சூர்யா. இந்த பெண் சிங்கம் ஐபிஎஸ் அதிகாரியும் குற்றவாளியை நாடு விட்டு நாடு பறந்து போய் கைது செய்துள்ளார் என்று பாராட்டுக்கள் குவிகின்றன. அதே நேரத்தில் சிறுமியை சீரழித்து இரண்டு பேர் மரணத்திற்கு காரணமான குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.

    English summary
    Kollam Police Commissioner and IPS Merin Joseph went to Saudi Arabia and managed to extradite a child-rape accused The accused had raped a 13-year-old girl in 2017 while he was in the state on a holiday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X