For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊதிய உயர்வுக்காக போராடும் பெண்களை இழிவாக பேசுவதா? அமைச்சருக்கு எதிராக கேரளாவில் முழு அடைப்பு!

ஊதிய உயர்வுக்காக போராடிய பெண்கள் குறித்து இழிவாக பேசிய கேரள அமைச்சருக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: பெண்களை இழிவாக பேசிய கேரள மின்சாரத்துறை அமைச்சர் மணியின் சர்ச்சை கருத்தால் அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கேரளா அமைச்சரின் கருத்தை கண்டித்து இடுக்கி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஊதிய உயர்வு மற்றும் தொழில்முறை விதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடுக்கியைச் சேர்ந்த 'பெண்கள் ஒற்றுமை' இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் குறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அந்த மாநில மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம்.மணி, போராட்டம் என்கிற பெயரில் பெண்கள் குடியும், கூத்துமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Kerala minister M.M.mani's comment over women sparks another row

அமைச்சர் மணியின் இந்த கருத்துக்கு பெண் செயற்பாட்டாளர்கள் மட்டுமின்றி, அவர் சார்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் பெண் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேயிலைத் தொழிலாளர்களான தங்களது வாழ்வாதாரத்திற்காக நடத்திய போராட்டத்தை கொச்சைபடுத்துவதா என்றும், நடுரோட்டில் போராடிய நாங்கள் குடியும், கூத்துமாக இருந்ததை அமைச்சர் பார்த்தாரா என்றும் கடும் கோபத்தில் வசை பாடியுள்ளனர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

Kerala minister M.M.mani's comment over women sparks another row

மேலும் தங்கள் காலில் விழுந்து அமைச்சர் மணி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பெண்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே அமைச்சரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா வலியுறுத்தியுள்ளார்.

Kerala minister M.M.mani's comment over women sparks another row

இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் பினராயி விஜயன், மணியின் இந்த கருத்து பொருத்தமற்றது என்று கூறியுள்ளார். மேலும் இந்த பிரச்னை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Kerala minister M.M.mani's comment over women sparks another row

இதனிடையே அமைச்சர் மணியை டிஸ்மிஸ் செய்ய கோரி பா.ஜ.க சார்பில் இடுக்கி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இடுக்கி வழியாக செல்லும் தமிழக பேருந்துகள் தமிழக - கேரள எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு வரை மட்டுமே தமிழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

English summary
Kerala minister's offensive remarks on pengal ottrumai evokes widespresd criticism ; inappropriate says cm pinarayi vijayan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X