For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளாவில் கலக்கும் ''அம்மையும் குஞ்சும்'' வாட்ஸ்அப் குரூப்.. வீணாஜார்ஜ் MLA-வுக்கு குவியும் பாராட்டு

Google Oneindia Tamil News

பத்தனம்திட்டா: கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அரன்முலா தொகுதியில் ''அம்மையும் குஞ்சும்'' (தாயும்-குழந்தையும்) என்ற வாட்ஸ் அப் குழுவை தொடங்கி மக்களின் மனதை கவர்ந்துள்ளார் பெண் எம்.எல்.ஏ. வீணா ஜார்ஜ்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளை வைத்துள்ள தாய்மார்கள் என பலரும் வீணா ஜார்ஜ் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்து எளிய முறையில் மருத்துவர்களிடம் ஆலோசனைகள் கேட்டு சந்தேகங்களை தீர்த்துக்கொள்கின்றனர்.

ஆரன்முலா தொகுதி பெண் எம்.எல்.ஏ. வீணா ஜார்ஜின் இந்த புதிய முயற்சிக்கு அரசியல் கட்சிகளை கடந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

மே 17ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஊரடங்கு? முதல்வரிடம் மருத்துவ குழு கொடுத்த முக்கிய டிப்ஸ்மே 17ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஊரடங்கு? முதல்வரிடம் மருத்துவ குழு கொடுத்த முக்கிய டிப்ஸ்

கர்ப்பிணிப் பெண்

கர்ப்பிணிப் பெண்

கண்ணூர் மாவட்டம் இரிட்டியை சேர்ந்த ரின்சி என்பவர் தனது கணவர் பத்தனம்திட்டாவில் வேலை பார்ப்பதால் சில மாதங்களுக்கு முன்பு அங்கு குடிபெயர்ந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட தருணத்தில் ரின்சி நிறை மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். இதனால் பேறுகாலத்திற்காக கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்த அவர் இது குறித்து அரன்முலா தொகுதி எம்.எல்.ஏ. வீணா ஜார்ஜை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார்.

வீணா ஜார்ஜ் உதவி

வீணா ஜார்ஜ் உதவி

இதனிடையே கண்ணூர் மாவட்டம் அப்போது கொரோனா பாதிப்பில் சிவப்பு மண்டலமாக இருந்ததால் ரின்சியை அங்கு அனுப்ப முடியவில்லை. இதையடுத்து அவரை அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்த எம்.எல்.ஏ. வீணா ஜார்ஜ், ரின்சியை உடனிருந்து பார்த்துக்கொள்ள ஒரு பெண்னை பணியமர்த்தினார். ரின்சியின் தாய் உடனிருந்தால் எப்படி கவனித்துக்கொள்வாரோ அதைபோல் அவரை கவனித்துக்கொள்ள வீணா ஜார்ஜ் ஏற்பாடுகள் செய்திருந்தார்.

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணி பெண்கள்

இந்நிலையில் ரின்சியை போல் தனது தொகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கர்ப்பிணிப் பெண்கள் ஊரடங்கால் மாதாந்திர ஆலோசனைக்கும், சிகிச்சைக்கும் செல்ல முடியாமல் தவிப்பதை உணர்ந்தார் வீணா ஜார்ஜ் எம்.எல்.ஏ.. அவர்களுக்கு உதவ வேண்டும் ஆனால் எப்படி உதவுவது என அவர் யோசித்து கண்டுபிடித்த திட்டமே ''அம்மையும் குஞ்சும்'' என்ற வாட்ஸ் அப் குரூப். இந்த குருப் ஆரன் முலா தொகுதியில் 4 பிரிவாக செயல்படுகிறது. அதில் சுமார் ஆயிரம் கர்ப்பிணிப் பெண்கள் வரை இணைந்துள்ளனர்.

மகப்பேறு மருத்துவர்

மகப்பேறு மருத்துவர்


''அம்மையும் குஞ்சும்'' வாட்ஸ் அப் குழுவில் மகப்பேறு மருத்துவர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள், கவுன்சிலிங் கொடுக்கக் கூடிய மனநல ஆலோசகர்கள் என பலரும் உள்ளனர். இவர்கள் குழுவில் உள்ள யாரேனும் சந்தேகமோ, ஆலோசனையோ கேட்டால் உடனடியாக பதில் அளிக்கின்றனர். அலைச்சல் இல்லாமல், செலவு இல்லாமல், இருந்த இடத்தில் இருந்தே மருத்துவ உதவி வழங்க ஏற்பாடு செய்துள்ள வீணா ஜார்ஜ் எம்.எல்.ஏ.வுக்கு கேரளாவில் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. வீணா ஜார்ஜ், இதற்கு முன்பு பத்திரிகையாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Kerala mla veena george created ammaiyum kunjum whats app group for pregnanat womens
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X