For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வழிபாட்டு தலங்களில் ஆயுத பயிற்சியை தடுக்க புதிய சட்டம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

வழிபாட்டு தலங்களில் ஆயுத பயிற்சி எடுப்பதை தடுக்க கேரளாவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தின் வழிபாட்டு தலங்களில் எடுத்துவரும் ஆயுதபயிற்சியை தடுத்து நிறுத்த புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

கேரளாவில் மசூதிகள் மற்றும் கோயில்கள் உள்ளிட்டவழிபாட்டு தலங்களில் சில அமைப்புகள் ஆயுத பயிற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Kerala mulls legislation to bans weapons traing at places of worship

இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என கேரள சட்டசபையில் காங் உறுப்பினர்கள் கேள்விகளை சராமரியாக கேட்டனர்.

இதற்கு கேரள முதல்வர் பினராஜ் விஜயன் பதிலளித்து பேசினார். அப்போது, கேரளாவில் கோயில்கள், மசூதிகள் உள்பட வழிபாட்டு தலங்களிலும், சில கல்வி நிறுவனங்களிலும் ஆர்எஸ்எஸ், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகள் ஆயுத பயிற்சி செய்து வருவதாக புகார் எழுந்துள்ளதாக கூறினார்.

இதனால் அசம்பாதவிதம் ஏற்படும் முன்னர் இது போன்ற செயல்களை தடுக்க சட்டம் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், ஆயுத பயிற்சி தொடர்பான தகவல்கள் அளிப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் மேலும் தெரிவித்தார்.

முதல்வர் பினராயி விஜயனின் இந்த அறிவிப்பால் கேரளாவில் மதவாத பயிற்சிகள் நடப்பது உறுதியாகி உள்ளது.

English summary
The Chief Minister announced that the new law will be brought soon to stop the armed struggle in the places of worship in the state of Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X