For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவின் முதல் அதிவேக கிராமப்புற பிராட்பேண்ட்- இடுக்கியில் இன்று துவக்கம்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: இந்தியாவின் முதல் அதி வேக கிராமப்புற பிராட்பேண்ட் "நெட்வொர்க் டிஜிட்டல் இந்தியா" இடுக்கியில் இன்று துவக்கி வைக்கப்பட உள்ளது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.இது நாட்டிலே முதல் முறையாக கேரள மாநிலம் இடுக்கியில் துவக்கி வைக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியை மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல்தொழில்நுட்பதுறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் துவக்கி வைக்கிறார்.

Kerala's Idukki to get India's first hi-speed rural broadband network

மாநில முதல்வர் உம்மன் சாண்டி தலைமை விருந்தினராக கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.மொபைல் மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் அடுத்த தலைமுறை சேவைகளை வழங்க புதி வழிகள் திறந்துவிடப்பட உள்ளன.

இத்தகைய தொழில்நுட்பத்தால்இந்தியாவில் உள்ள 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் வரை இணைக்க வாய்ப்புகள் உள்ளன. இது பிராட்பேண்ட் ஒளியிழை நெட்வொர்க் மூலம் எளிதாக செய்யலாம்.இதன் மூலம் 600 மில்லியன் கிராமப்புற மக்களுக்கும் இந்த அலைவரிசை இணைப்பு எளிதாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்காலத்தில் இ-சுகாதாரம், மின் கல்வி,மின் ஆளுமை மற்றும் இ-காமர்ஸ் விநியோகத்தால் கிராமபுற பஞ்சாயத்துகளுக்கு உதவியாக இருக்கும்.முதல் கட்டமாக 50 ஆயிரம் கிராம பஞ்சாயத்துக்கள் இதன் மூலம் இணைக்கப்படுகிறது. மீதமுள்ள 2 லட்சம் பஞ்சாயத்துகளும் வரும் 2016 ஆம் ஆண்டிற்குள்ள விரிவுபடுத்தப்படும் என தெரியவருகிறது.

English summary
India's first hi-speed rural broadband network would be commissioned in Kerala's high range Idukki district tomorrow, ushering in a new era of Digital India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X