For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களே மூணாறுக்கு புறப்படுங்க.. செம கிளைமெட்... மைனஸ் டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை ... பனிப்பொழிவு!

Google Oneindia Tamil News

மூணாறு: மூணாறில், சில நாட்களாக குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. அங்கு குறைந்த பட்ச வெப்ப நிலை, மைனஸ் டிகிரி செல்சியசை எட்டியுள்ளதால், உறை பனி ஏற்பட்டு, கடுங்குளிர் நிலவுகிறது.

இதனால ஏராளமான மக்கள் மூணாறுக்கு படையெடுத்து உள்ளனர். சுற்றுலா துறை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வருவதால் கேரளா அரசு நிம்மதி அடைந்துள்ளது.

Kerala’s Munnar freezing in sub zero temperature

கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறு சுற்றுலா தலத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் விரும்பி படையெடுத்து வருவது வழக்கம். மலை வாசஸ்தலமான இங்கு நிலவும் ரம்மியமான சூழலை அனுபவிப்பது சொர்க்கத்தில் மிதப்பது போன்றதாகும்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கேரளாவில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டது. சுமார் 7 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டன. இதனால் மூணாறுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

ஏற்கனவே கடும் குளிர் நிலவும் மூணாறில் தற்போது மைனஸ் ஜீரோ டிகிரிக்கும் கீழே வெப்பநிலை பதிவாகி உள்ளது.
தேவிகுளம் லக்காட் எஸ்ட்டேட் பகுதியில் செவ்வாய்கிழமை, புதன்கிழமைகளில் வெப்ப நிலை மைனஸ் டிகிரியாக உள்ளது. இந்த சீசனில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை இதுவாகும்.மேலும் அங்கு கடும் பனிப்பொழிவும் உள்ளது. மூணாறு நகர், நல்லதண்ணி பகுதியில் 3 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

அங்குள்ள தென்மலை, லட்சுமி, செந்துவரா, கன்னிமலை எஸ்ட்டேட் பகுதியில் 1 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை உள்ளது. வரும் நாட்களில் மூணாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மைனஸ் டிகிரி வெப்பநிலையை பதிவாகும் என தெரிகிறது.இந்த சூழ்நிலையை அனுபவிக்க மக்கள் அங்கு திரண்டுள்ளதால் ரூம்கள் மிக வேகமாக நிரம்பி வருகின்றன.

இதனால் அங்கு சுற்றுலாவை நம்பி உள்ள மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் சுற்றுலா துறை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. கேரளா அரசை நிமமதி அடைய செய்துள்ளது.

English summary
In Munnar, the impact of the cold has increased over the last few days. As the minimum temperature there reaches minus degrees Celsius, it freezes and freezes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X