For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாஜ்மஹாலை கேரளாவுக்கே மாத்திடுங்கப்பா...உ.பி. அரசை வம்புக்கிழுத்த கேரள சுற்றுலாத்துறை!

உத்தரப்பிரதேச அரசு தாஜ்மஹாலை சுற்றுலா தலங்களின் பட்டியலில் இருந்து நீக்கியதை அடுத்து தாஜ்மஹாலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கேரளா சுற்றுலாத்துறை டிவிட்டரில் டிவிட் செய்து வருகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: உ.பி. அரசு தாஜ்மஹாலை சுற்றுலா தலங்களின் பட்டியலில் இருந்து சில நாட்களுக்கு முன் நீக்கியது. இந்தியா முழுக்க இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை அடுத்து தாஜ்மஹாலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கேரளா சுற்றுலாத்துறை டிவிட்டரில் டிவிட் செய்து வருகிறது. கேரளா சுற்றுலாத்துறையின் அதிகாரப் பூர்வ ஐடியில் இருந்து இந்த டிவிட்டுகள் இடப்பட்டுள்ளன.

இதையடுத்து சமூக வலைதளத்தில் இருக்கும் பலரும் இந்த டிவிட்டை வைத்து புதிய டிரெண்டை உருவாக்கி வருகின்றனர். இது உத்திரபிரதேச அரசுக்கு சிறந்த சவுக்கடி என்றும் கூறி வருகின்றனர்.

 தாஜ்மாஹால் சுற்றுலாத்தலம் இல்லை

தாஜ்மாஹால் சுற்றுலாத்தலம் இல்லை

உ.பி.யில் புதிதாக பதவியேற்றுள்ள யோகி ஆதித்யாநாத் தலைமையிலான அரசு சில வாரங்களுக்கு முன் தாஜ்மாஹாலை அவர்களது சுற்றுலா தலங்களின் பட்டியலில் இருந்து நீக்கியது. அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ பட்டியலில் இருந்த தாஜ்மஹால் நீக்கப்பட்டது. இதை பாஜக தலைவர்கள் பலரும் பாராட்டி இருந்தனர். ஆனாலும் இந்திய முழுவதும் பலராலும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தாஜ்மஹால் முகாலய அரசால் கட்டப்பட்டது அது இந்தியக் கட்டிடக் கலை இல்லை என்பதால் , தாஜ் மஹால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.

 பினராயி விஜயனுடன் மோதிய யோகி

பினராயி விஜயனுடன் மோதிய யோகி

இந்த நிலையில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத் சிலநாட்களுக்கு முன் கேரளாவில் நடந்த ஆர்.எஸ்.எஸ் பேரணியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கேரள அரசுக்கு எதிராக நிறைய கருத்துக்களை கூறினார். இதையடுத்து கேரளா அரசுக்கும், உ.பி. அரசுக்கும் இடையில் வார்த்தைப் போர் உருவானது. இரு அரசுகளும் மாற்றி மாற்றி தங்கள் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து தகவல்களை வெளியிட்டனர்.

தாஜ்மஹால் பற்றி கேரள சுற்றுலாத்துறை

இந்த நிலையில் கேரளா சுற்றுலாத்துறை தாஜ்மஹாலை குறித்து டிவிட் ஒன்று செய்துள்ளது. அந்த டிவிட்டில் இந்தியாவில் இருக்கும் பலருக்கும் புதிய எழுச்சியுட்டக் கூடிய ஒன்றாக தாஜ்மஹால் இருக்கிறது. இந்த தாஜ்மஹாலுக்கு தலை வணங்குகிறோம் என ட்வீட் செய்து அதை பேஸ்புக்கிலும் ஷேர் செய்திருந்தது.

உபியை வம்புக்கு இழுத்த மல்லுக்கள்

இந்த நிலையில் கேரள சுற்றுலாத்துறையின் இந்த டிவிட் மிகவும் வைராலனது. உ.பி. அரசை கலாய்த்து பலரும் டிவிட்டரில் எழுத ஆரம்பித்தனர். சிலர் ''பேசாம தாஜ்மஹாலை கேரளாவுக்கு மாத்திடுங்கப்பா'' என்பது போல எழுதி இருந்தனர்.

English summary
Kerala's Tourism Department has saluted the Taj Mahal for its rich heritage. This attempt made by Kerala government to troll the Yogi Adityanath got viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X