For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓணம் பண்டிகைக்கு வருகிறாரா மலாலா? கேரள மாணவர்கள் கடிதம் மூலம் அழைப்பு

Google Oneindia Tamil News

திரிச்சூர் : பாகிஸ்தானைச் சேர்ந்த நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாயின் துணிச்சலான நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் குழு, அவருக்கு ஓணம் பண்டிகைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கேரளாவின் கூனமூச்சி என்ற குக்கிராமத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 1-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியர்கள், 18 வயதான மலாலாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இவர்கள் அனைவரும் ‘ஷ்ரேயாஸ் வித்யார்த்தி கூட்டயமா' என்ற மாணவர் அமைப்பு மூலமாக ஒன்றிணைந்தவர்கள்.

malala

இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மலாலாவின் நடவடிக்கைகளை குழந்தைகளும் புரிந்து கொள்ளும் வகையில் பல மேடை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். மேலும் கடந்த 20-ம்தேதி மலாலாவின் பிறந்த நாளை புத்தக வடிவம் கொண்ட கேக்கை வெட்டி கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சிகளின்போது எடுக்கப்பட்ட படங்களையும் இணைத்து அவர்கள் மலாலாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், வருகிற ஆகஸ்ட் 27 மற்றும் 28-ம் தேதிகளில் கொண்டாடப்படவுள்ள, கேரளாவின் பிரம்மாண்ட பண்டிகையான ஓணம் பண்டிகைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த அழைப்பை ஏற்று மலாலா வருவார் என்று கேரள மாணவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

English summary
Pakistani Nobel Laureate Malala Yousafzai has been invited by a group of Kerala school students, who have been motivated by her activities, to join them for Kerala's harvest festival 'Onam' next month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X