For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓ.. இது ராணுவ வீரரின் வீடா.. என்னை மன்னிச்சிடுங்க.. சுவரில் எழுதிவிட்டு சென்ற திருடன்

Google Oneindia Tamil News

Recommended Video

    kerala thief wrote apology letter| தெரியாம வந்துட்டேன் | என்னை மன்னிச்சுடுங்க . திருடனின் மன்னிப்பு

    கொச்சி: கொச்சி அருகே திருவாங்குளம் பகுதியில் அடுத்தடுத்து கடைகளில் திருடிய கொள்ளையன், ராணுவ வீரரின் வீட்டில் மட்டும் திருடவில்லை. ஓ.. இது ராணுவ வீரரின் வீடா.. என்னை மன்னிச்சிடுங்க.. என திடீர் ஞானோதயமாக சுவரில் எழுதிவிட்டு சென்றிருக்கிறான்.

    கொச்சி அருகே திருவாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரே நாளில் 5 கடைகளில் பொருட்களை திருடன் ஒருவன் நைசாக புகுந்து கொள்ளையடித்து உள்ளான்.

    அதன்பிறகு வீடுகளில்திருட நினைத்த அவன் அந்த பகுதியில் இருந்த முன்னாள் ராணுவ வீரர் ஐசக் மணி என்பவர் வீட்டின் பின்புற கதவை உடைத்து நுழைந்திருக்கிறான்.

    தெரியாமல் நுழைந்தேன்

    தெரியாமல் நுழைந்தேன்

    அங்கு சென்ற அவனுக்கு ராணுவ வீரரின் வீடு என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கு திருட மனமில்லாமல்,. சுவரில் மலையாளத்தில் சில வரிகளை எழுதிவிட்டு சென்றுள்ளான். அதில் "இது ராணுவ வீரரின் வீடு என்பது தெரியாமல் நுழைந்துவிட்டேன். கடைசி நேரத்தில் தான் ராணுவ வீரரின் வீடு என்பது எனக்கு தெரியவந்தது.

    தெரியாமல் உடைத்துவிட்டேன்

    தெரியாமல் உடைத்துவிட்டேன்

    ராணுவ வீரரின் தொப்பியை வைத்து தான் இது ராணுவ வீரரின் வீடு என்பதையே நான் கண்டுபிடித்தேன். தெரியாமல் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துவிட்டேன். என்னை மன்னிக்க வேண்டும். பைபிளில் 7வது கட்டளையை மீறி விட்டேன். ராணுவ அதிகாரி அவர்களே என்னை மன்னித்து விடுங்கள்" இவ்வாறு திருடன் விசித்திரமாக எழுதியிருக்கிறான்.

    மதுவை தேடினான்

    மதுவை தேடினான்

    ராணுவ வீரரின் வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள், நகைகள் எதுவும் இல்லை. எனினும் வீட்டில் எந்த பொருளையும் திருடன் திருடவில்லை. ராணுவ வீரரின் வீடு என்றால் கண்டிப்பாக மது இருக்கும் என்று தேடிய திருடன் பீரோவில் இருந்து ஒரு பாட்டிலில் இருந்த மதுவை கொஞ்சம் ஊற்றி குடித்துவிட்டு சென்று இருக்கிறான்.

    விசித்திர திருடன்

    விசித்திர திருடன்

    இதற்கிடையே அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளில் கொள்யைன் திருடி சென்றதால் கொச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது ராணுவ வீரரின் வீடும் திறந்து கிடக்கிறதே என்று எண்ணி உள்ளே சென்று பார்த்த போது தான் திருடன், சுவற்றில் மலையாளத்தில் மன்னிக்குமாறு எழுதியது தெரியவந்தது. அந்த ராணுவ வீரர் வெளிநாடு சென்று இருப்பது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் அந்த விசித்திர திருடனை தேடிவருகிறார்கள்.

    English summary
    kerala thief not looting in army man house, he wrote apology letter on house wall, at the same time he loote 5 shops in cochin
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X