For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பள்ளிக் கல்வி தரத்தில் "பெஸ்ட்" கேரளா.. ரொம்ப ரொம்ப மோசம் உ.பி.. தமிழகத்தின் நிலை?

Google Oneindia Tamil News

Recommended Video

    பள்ளிக் கல்வி தரத்தில் 'பெஸ்ட்' கேரளா.. ரொம்ப ரொம்ப மோசம் உ.பி.. தமிழகத்தின் நிலை?

    சென்னை: பள்ளிக் கல்வித் தரத்தில் நாட்டிலேயே கேரளாதான் பெஸ்ட் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இதில் மிக மிக மோசமான நிலையில் நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் உள்ளது. அந்த மாநிலத்திற்கு கடைசி இடம்தான் கிடைத்துள்ளது.

    நிதி ஆயோக் அமைப்பின் சார்பில் உலக வங்கி மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியோடு பள்ளிக் கல்வி தர பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

    விரைவில் இந்த பட்டியலை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை வெளியிடவுள்ளது. இதில் உள்ள முக்கிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

    44 காரணிகள் அடிப்படை

    44 காரணிகள் அடிப்படை

    44 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பாடத் திட்டம், போதனை, தேர்வு முடிவுகள், அடிப்படைக் கட்டமைப்பு, பள்ளி நிர்வாகம் உள்ளிட்டவை அதில் சில.

    20 பெருசு

    20 பெருசு

    இந்தியாவை பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசம் என 3 ஆக பிரித்து ஆய்வு நடத்தப்பட்டது. 20 மாநிலங்கள் பெரிய மாநிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    கேரளா 1.. கர்நாடகா 3

    கேரளா 1.. கர்நாடகா 3

    பெரிய மாநிலங்கள் வரிசையில் முதலிடத்தை கேரளா பிடித்துள்ளது. 2வது இடம் ராஜஸ்தான் மற்றும் 3வது இடத்தில் கர்நாடகா உள்ளன. தமிழகம் இந்த வரிசையில் எந்த இடத்தில் உள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

    உபி கேவலம்

    உபி கேவலம்

    நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமாக கருதப்படும், அதிக அளவு எம்பிக்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பும், அதிக பிரதமர்களை நாட்டுக்கு வழங்கிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் கல்வித்தரம் படு மோசமாக இருக்கிறது. அதாவது இந்த ரேங்கிங் வரிசையில் 20வது இடம்தான் உ.பிக்கு கிடைத்துள்ளது. அதாவது கடைசி இடத்தில் கிடக்கிறது உ.பி.

    மேற்கு வங்கம் இல்லை

    மேற்கு வங்கம் இல்லை

    ஜார்க்கண்ட், பீகார், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகியவையும் தரம் குறைந்த கல்வியைக் கொண்ட மாநிலங்கள் வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
    சிறிய மாநிலங்கள் வரிசையில் மணிப்பூர், திரிபுரா, மிஸோரம், சிக்கிம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல் பிரதேசம், கோவா ஆகியவை வகைப்படுத்ததப்பட்டுள்ளன. மேற்கு வங்கம் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.

    தமிழ்நாட்டின் நிலை

    தமிழ்நாட்டின் நிலை

    தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த முறை வெளியான பட்டியலில் கல்வித்தரத்தில் 17வது இடத்தை தமிழகம் பெற்றிருந்தது. அதேசமயம், அடிப்படைக் கட்டமைப்பு உள்ளிட்ட பிற காரணிகளில் அது டாப் 5க்குள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த ஆய்வின் முழு முடிவுகளையும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை வெளியிடும்.

    English summary
    Kerala tops in school education quality index 2019, Uttar Pradesh is placed last in the Ranking.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X