For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

7% வளர்ச்சியில் ஜிடிபி, முதலீடுகள் நீண்ட காலத்திற்கு பிறகு அதிகரிக்கிறது: பொருளாதார ஆய்வறிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2019-20ம் நிதியாண்டில் 7 சதவீதமாக வளரும் என்று, நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட, பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மத்திய அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் குழுவினர் உருவாக்கிய 2019-20 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, ராஜ்யசபாவில் இன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால், தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Key highlights from the Economic Survey 2019-20

பொருளாதார ஆய்வறிக்கையுள்ள முக்கிய சிறப்பம்சங்கள்:

  • மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2018-19ல் வீழ்ச்சியடைந்த பின்னர் பொருளாதாரம் மீட்கப்படுவதை பார்க்க முடிகிறது. முந்தைய சில ஆண்டுகளில் தொடங்கப்பட்ட கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொருளாதார நிலைமை, தொடர்ந்து நிலையானதாக இருக்கிறது. 2019-20 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7% ஆக உயரும் வாய்ப்புள்ளது.
  • இந்த நிதியாண்டில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக நாடு மாற, ஆண்டுக்கு 8% அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி, வளர்ச்சியடைய வேண்டும்.
  • தேவை, வேலைவாய்ப்பு, ஏற்றுமதி மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் வளர்ச்சி தேவை எனில், முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.
  • முதலீட்டு நடவடிக்கைகளில் வளர்ச்சி அதிகரிப்பதாக தெரிகிறது. 2011-12 முதல் முதலீடு குறைந்த நிலையில், இனி அதிகரிக்கும்.
  • கிராமப்புற ஊதிய வளர்ச்சி 2018ம் ஆண்டு மத்திய பகுதியில் இருந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது
  • அரசியல் ஸ்திரத்தன்மை பொருளாதாரத்தின் மீதான பிரச்சினைகளை விலக்கிவிடும்.
  • பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய தடைகளில் ஒன்று, ஒப்பந்தங்களை சரியாக அமல்படுத்துவது ஆகும். மேலும் சட்ட ரீதியில் வரும் பிரச்சினைகளை சரி செய்வதும் முக்கியமானது. சட்ட செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
  • சேமிப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவை நேர்மறையான பலன் தருபவை. முதலீட்டை விட சேமிப்பு அதிகரிக்க வேண்டும்.
  • பொது நிதி பற்றாக்குறை 2019ம் நிதியாண்டில் 5.8% ஆக இருந்தது, கடந்த நிதியாண்டில் இது 6.4% என்ற அளவில் அதிகமாக இருந்தது.
  • தேவை அதிகரித்துள்ளதால், முதலீட்டு விகிதம் 2020ம் நிதியாண்டில் அதிகமாகும்.
  • இந்த நிதியாண்டில் கச்சா எண்ணெய் விலை குறையும்
  • பொருளாதாரத்தின் வளர்ச்சி பாதையை தீர்மானிப்பதில் நுகர்வு, முக்கியமானதாக இருக்கும்
English summary
GDP or gross domestic product growth is projected at 7 per cent in financial year 2019-20, according to the Economic Survey, tabled in Parliament by Finance Minister Nirmala Sitharaman on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X