For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிரவுசரை தூக்கிப் போட்டு பேன்ட்டைக் கையில் எடுக்கும் ஆர்.எஸ்.எஸ்.!

Google Oneindia Tamil News

டெல்லி: இது காலம் வரை போட்டு வந்த டிரவுசரை மாற்றப் போகிறது ஆர்.எஸ்.எஸ். அதாவது சீருடையில் மாற்றம் கொண்டு வருகிறார்கள்.இனிமேல் டிரவுசருக்குப் பதில் "ஃபுல் பேன்ட்" போடப் போகிறார்களாம்.

இதுதொடர்பான முடிவு நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர் மட்டக் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாம். இந்த முடிவு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் அனைவரும் பேன்ட்டுக்கு மாறுவார்களாம்.

இருப்பினும் சீருடை மாறும் தகவல் அனைத்து மாநில ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கும் தெரிவிக்கப்பட்டு வருகிறதாம்.

இறுக்கமான டிரவுசர்

இறுக்கமான டிரவுசர்

இது நாள் வரை ஆல்எஸ்எஸ் பயன்படுத்தி வரும் டிரவுசரானது சற்றே இறுக்கமானது. இதனால் யோகா உள்ளிட்டவற்றை செய்வதில் சிரமம் இருந்து வந்தது.

இனி லூஸா

இனி லூஸா

எனவேதான் டிரவுசருக்குப் பதிலாக பேன்ட்டுக்கு மாற தீர்மானிக்கப்பட்டுள்ளதாம். புதிய பேன்ட் சற்று லூஸாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

யோகா பண்ணலாம்

யோகா பண்ணலாம்

இதன் மூலம் யோகா செய்வது, சூரிய நமஸ்காரம் செய்வது ஆகியவை எளிதாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

மற்றவை மாறாது

மற்றவை மாறாது

டிரவுசரை மட்டும்தான் ஆர்எஸ்எஸ் மாற்றுகிறது. மற்றபடி வெள்ளைச் சட்டை, கருப்புத் தொப்பி, நீண்ட குச்சி, கருப்பு ஷூ போன்றவற்றில் மாற்றம் இல்லையாம்.

ஓம் சொல்லி ஒப்புதல்

ஓம் சொல்லி ஒப்புதல்

நாக்பூர் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் டிரவுசர் மாற்ற முடிவை ஓம் சொல்லி ஆமோதித்தனராம்.

கடைசியாக 2010ல்

கடைசியாக 2010ல்

கடைசியாக சீருடையி்ல 2010ம் ஆண்டு மாற்றம் செய்திருந்தது ஆர்.எஸ்.எஸ். அப்போது லெதர் பெல்ட்டுக்குப் பதில் கேன்வாஸ் பெல்ட் அப்போது அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் பலர் இன்னும் பழைய மாதிரி லெதர் பெல்ட்தான் போடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலத்தில்

ஆரம்ப காலத்தில்

1925ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தோற்றுவிக்கப்பட்டது. 1939ம் ஆண்டு வரை சட்டை, டிரவுசர ஆகிய இரண்டுமே காக்கியாக இருந்தது. 1940ல் வெள்ளைச் சட்டை வந்தது. 1973ல் நீண்ட பூட்டுகளுக்குப் பதில் லெதர் ஷூ அறிமுகமானது. பிறகு ரெக்ஸின் ஷூக்களும் அனுமதிக்கப்பட்டன.

English summary
RSS has decided to change its trousers to pants soon. A decision has been taken at it Nagpur meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X