For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பியில் கட்ட பஞ்சாயத்து: செல்போன்கள், ஜீன்ஸ் பயன்படுத்த பெண்களுக்குத் தடை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஒரு கிராம பஞ்சாயத்தில் பெண்கள் செல்போன்கள் மற்றும் ஜீன்ஸ் போன்றவைகளைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

இவைகளை உபயோகிப்பதால்தான் ஈவ் டீஸிங், பாலியல் குற்றம் நடைபெறுவதாக குஜ்ஜார் சமூகத்தை சேர்ந்த அந்த பஞ்சாயத்து கூறியுள்ளது.

jeans

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குஜ்ஜார் சமூகத்தை சேர்ந்தவர்களின் பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. அதில், பெண்கள் இது போன்ற ஆடைகள் அணிந்து செல்வதனால்தான்

அவர்களுக்கு எதிராக குற்ற செயல்கள் நடைபெறுகின்றன என கூறி திருமணாகாத பெண்கள் ஜீன்ஸ், செல்போன்கள் அணிவதற்கு தடை விதிக்கப்படுள்ளது.

உத்தர பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்களில் உள்ள சில பகுதிகளில் ஈவ் டீசிங் சம்பவங்கள் நடைபேற்றபோது, கட்ட பஞ்சாயத்து அல்லது சாதிப்பஞ்சயத்துகளில் இது போன்ற தடை உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A community panchayat has banned girls from wearing jeans and keeping mobile phones claiming that they were having a"bad" effect on them and were responsible for eve-teasing incidents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X