For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிட்னி தானமளிக்க மத வேறுபாடின்றி முன்வரும் நல்ல உள்ளங்கள்.. சுஷ்மா உருக்கம்

கிட்னிக்கு மத முத்திரை இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: இஸ்லாமியர்கள் பலர் கிட்னி தானம் செய்ய முன்வந்துள்ளதை அடுத்து அதற்கு மத முத்திரை எதுவும் இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருக்கிறார்.

சுஷ்மா சுவராஜுக்கு கிட்னி செயல் இழந்துள்ளதால் அதற்கு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான பரிசோதனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செய்யப்பட்டு வருகிறது.

Kidney has no religious labels: Swaraj thanking Muslim man's offer

இந்நிலையில், ராஜஸ்தான் இளம் விவசாயி,முஜிப் அன்சாரி என்ற இஸ்லாமிய உள்ளிட்ட ஏராளமானோர் சுஷ்மாவுக்கு கிட்னி தானம் வழங்க முன்வந்துள்ளனர்.

அதற்கு நன்றி தெரிவித்து அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சகோதரர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி என்று என்று குறிப்பிட்டுள்ள அவர், கிட்னிக்கு மத முத்திரை இல்லை என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக கூறியிருக்கிறார்.

முன்னதாக முஜிப் அன்சாரி தனது டுவிட்டர் பக்கத்தில் உத்தரப்பிரதேச மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவாளரான தான் சுஷ்மாவுக்கு கிட்னி தானம் வழங்க தயாராக இருப்பதாகவும், அவரை எனது அம்மாவாக கருதி கிட்னி தானம் செய்ய விரும்புவதாகவும் பதிவிட்டிருந்தார். மேலும், சுஷ்மா விரைவில் குணமடைய அல்லா ஆசிர்வதிப்பார் என்றும் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள சுஷ்மா கிட்னிக்கு மத முத்திரை இல்லை என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நியமத் அலி சேக், ஜான் ஷா உள்ளிட்ட பிற இஸ்லாமிய தோழர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுஷ்மாவுக்கு கிட்னி தானம் வழங்க முன்வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

64 வயதுடைய சுஷ்மா கிட்னி செயல்பாடு இழந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு கிட்னி தானம் வழங்க புதன்கிழமை முதல் ஏராளமானோர் விரும்பம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அனைத்து மக்களின் ஆசிரிவாதத்துடனும் கடவுளின் கிருபைாயலும் விரைவில் குணமாகி தாம் வீடு திரும்புவேன் என்றும் சுஷ்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

English summary
New Delhi: Kidney has no religious labels, External Affairs Minister Sushma Swaraj, undergoing treatment for renal failure, tweeted while thanking a Muslim man who offered her his kidney.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X