For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெலுங்கானாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கிரண்குமார் ரெட்டி வழக்கு

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தெலுங்கானா தனி மாநிலத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜூன் 2-ந் தேதி அதிகாரப்பூர்வமாக தெலுங்கானா மாநிலம் உதயமாக இருக்கிறது.

Kiran Kumar Reddy moves Supreme Court against bifurcation of Andhra Pradesh

இந்நிலையில் தெலுங்கானா தனி மாநிலத்தை எதிர்த்து ஆந்திர முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததுடன் காங்கிரஸை விட்டு விலகிய கிரண்குமார் உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கில்,. அரசியல் காரணங்களுக்காக ஆந்திர மாநிலம் பிரிக்கப்படுகிறது. அப்படி ஆந்திரா பிரிக்கப்படும் போது பொருளாதார அடிப்படையிலும், நதி நீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்வதிலும் பிரச்னை உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.

கிரண்குமார் ரெட்டியின் மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.

English summary
N Kiran Kumar Reddy, who resigned from the Andhra Pradesh chief minister's post on February 19 in protest against the Centre's decision to push through the bill creating Telangana as India's 29th state in Parliament, has moved the Supreme Court against plans to split the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X