For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொது இடத்தில் "இச்" கொடுத்து போராடுவது ஒழுங்கீனமானது.. கேரள உயர்நீதிமன்றம் "நச்"!

Google Oneindia Tamil News

கொச்சி: பொது இடத்தில் ஒன்று கூடி முத்தம் கொடுத்து போராட்டம் நடத்துவது ஒழுங்கீனமான செயல் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தொடங்கி நாட்டின் பல பகுதிகளிலும் இந்த Kiss of lOve போராட்டம் பரவி விட்டது. பல இடங்களில் கலாட்டாக்கள், அடிதடி, மோதல்களும் அரங்கேறி விட்டன.

Kiss of protest an immoral activity: Kerala High Court

கேரள மாநிலத்தில் நடந்த முத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதலும் நடந்தது. கோழிக்கோடு டவுன்டவுன் கபே ஹோட்டலில் நடந்த தாக்குதலில் கைதான யுவ மோர்ச்சா என்ற அமைப்பைச் சேர்ந்த 5 பேர் ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கமால் பாட்சா, முத்த போராட்டம் ஒழுக்கக்கேடானது, ஒழுங்கீனமானது.

இந்தப் போராட்டங்களின்போது வன்முறைதான் மூளுகிறது. இதை வைத்து ரவுடிகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடவே வழி வகுக்கிறது.

கலாச்சாரப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலர் நடந்து கொண்ட விதத்தால் மாநிலம் முழுவதும் முத்தப் போராட்டம் என்ற பெயரில் சட்டவிரோதமான, ஒழுங்கீனமான செயல்கள் பரவியது வேதனை தருகிறது என்றார் நீதிபதி கமால் பாட்ஷா.

English summary
The Kerala High Court on Tuesday said the Kiss of protest staged by some youngsters in the state was an immoral activity and came down heavily on moral policing holding that it was an act of hooliganism. Justice Kamal Pasha made the observation while granting bail to five Yuva Morcha workers, accused in the Down Town Cafe attack in Kozhikode district in the name of moral policing. The Court said atrocities in the name of moral policing by hooligans led to the kiss of protest movement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X