For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புகைப்பிடிப்பதை விட முத்திமிடுவதால் பேராபத்து: புற்றுநோய் வரலாம் பாஸ்!

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: முத்தம் கொடுப்பது புகைப்பிடிப்பதை விட ஆபத்து என்றும், அதனால் புற்றுநோய் ஏற்படும் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

என்னது, நீங்கள் சரியாகத் தான் படித்துள்ளீர்கள். புகைப்பிடிப்பதை விட முத்தம் கொடுப்பதால் ஏற்படும் ஆபத்து அதிகம். அதுவும் முத்தம் கொடுப்பதால் புற்றுநோய் ஏற்படும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து டெய்லிமெயில் நாளிதழில் குறிப்பிட்டிருப்பதாவது.

ஹெச்.பி.வி.

ஹெச்.பி.வி.

ஹியூமன் பாபிலோமா வைரஸ்(ஹெச்.பி.வி.) தொற்று முத்தமிடுவதால் பிறருக்கு பரவுகிறது. பிரெஞ்சு முத்தம் மற்றும் ஓரல் செக்ஸ் மூலம் இந்த வைரஸ் பிறருக்கு பரவுகிறது.

புற்றுநோய்

புற்றுநோய்

உள்நாக்கு பகுதியில் ஹெச்.பி.வி. தொற்று உள்ளவர்களுக்கு தொற்று இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 250 மடங்கு அதிகம் ஆகும். ஹெச்.பி.வி. ஆண்கள் மற்றும் பெண்களை தாக்கக்கூடியது.

டாக்டர்

டாக்டர்

ஆஸ்திரேலிய தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை மருத்துவர் மஹிபன் தாமஸ் கூறுகையில், உறவு வைக்காமல் முத்தமிட்டால் கூட ஹெச்.பி.வி. எளிதில் பரவும் என்றார்.

பிரெஞ்சு முத்தம்

பிரெஞ்சு முத்தம்

ஒருவர் தனது வாழ்நாளில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிக பேருக்கு பிரெஞ்சு முத்தம் கொடுத்துள்ளாரோ அவ்வளவுக்கு அவ்வளவு அவருக்கு ஹெச்.பி.வி. வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளது என்று டாக்டர் மஹிபன் தாமஸ் தெரிவித்துள்ளார்.

English summary
According to a report published in Daily Mail online, kissing is more dangerous than smoking and it can cause cancer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X